• TN Rain Alert: கரையை கடந்த புயல்.. 9-ஆம் தேதி 7 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை..


நேற்று (05-12-2023)  மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா  கடலோரப்பகுதிகளில் நிலவிய  மிக்ஜாம்’ தீவிர புயல்’  தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430  மணி அளவில் கடந்தது. 06.12.2023: தமிழகத்தில் ஓரிரு  இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 07.12.2023 மற்றும் 08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும்,  புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க



  • School, Colleges Leave: சென்னையில் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை; செங்கல்பட்டு, காஞ்சி மாவட்டக்ளில் நிலை என்ன? - முழு விவரம்!


மிக்ஜாக் புயல் வட தமிழக கடலோர மாவட்டங்களில் கோரத் தாண்டவமாடி விட்டு, ஆந்திராவில் நேற்று (டிச.6) கரையைக் கடந்தது. புயல் பாதிப்பால் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீர் வெள்ளம் தெருவைச் சூழ்ந்து, வீடுகளில் புகுந்தது. இதை அடுத்து, டிசம்பர் 4, 5 ஆகிய இரு தினங்களுக்கும் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் படிக்க



  • Half Yearly Exam Postponed: மழை பாதிப்பு: சென்னை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு


சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வி இயக்குநர் அறிவித்துள்ளார். மிக்ஜாம் புயல் பாதிப்பு காரணமாக இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.  தமிழ்நாடு முழுவதும் அரசு மற்றும்‌ அரசு உதவி பெறும்‌ பள்ளிகளில்‌ நாளை முதல்‌ அரையாண்டுத்‌ தேர்வு நடத்தப்பட உள்ளதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு இருந்தது. மழையால்‌ பாதிக்கப்பட்ட சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு மாவட்டங்கள்‌ தவிர அனைத்து மாவட்டங்களிலும்‌ திட்டமிட்டபடி அரையாண்டுத்‌
தேர்வு நடைபெறும்‌. மேலும் படிக்க



  • CM Stalin: மிக்ஜாம் புயல் பாதிப்பு.. ‘ரூ.5,060 கோடி இடைக்கால நிவாரணம் வழங்கிடுக’ - பிரதமருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம்..!


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திர மாநிலம் மசூலிப்பட்டினம் அருகேயுள்ள பாபட்லா என்னும் இடத்தில் கரையை கடந்தது. இந்த புயல் தமிழ்நாட்டில் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் மிகப்பெரிய அளவில் சேதத்தை ஏற்படுத்தியது. கடந்த டிசம்பர் 3 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி இரவு வரை 24 மணி நேரத்துக்கும் மேலாக சூறைக்காற்றுடன் கனமழை வெளுத்து வாங்கியதால் சென்னையின் அனைத்து இடங்களிலும் தண்ணீர் தேங்கியது. இதனால் உணவு, இருப்பிடம் இன்றி மக்கள் பலரும் அவதிப்பட்டனர். மேலும் படிக்க



  • PM Modi: பிரார்த்தனைகள்.. மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த பிரதமர் மோடி..


வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயல் ஆந்திரா மாநிலம் நெல்லூர் மற்றும் மசூலிப்பட்டினம் அருகே கரையை கடந்தது. இந்த புயலால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புயலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் மோடி ஆறுதல் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், “ மிக்ஜாம் புயலால், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் புதுச்சேரியில் கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இந்த புயலில் தங்கள் குடும்பத்தினரை இழந்து வாடும் நபர்களுக்கு ஆழ்ந்த இரங்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்தப் புயலால் பாதிக்கப்பட்டவர்களுடன் எனது பிரார்த்தனைகள் உள்ளன. மீட்பு குழுவினர், அதிகாரிகள் தொடர்ந்து மக்களுக்காக அயராது உழைத்து வருகின்றனர். மேலும் படிக்க