நேற்று (05-12-2023) மத்தியமேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திரா கடலோரப்பகுதிகளில் நிலவிய மிக்ஜாம்’ தீவிர புயல்’ தெற்கு ஆந்திரா கடற்கரையை தெற்கு பாபட்லாவிற்கு அருகே நண்பகல் 1230 -1430 மணி அளவில் கடந்தது.
06.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
07.12.2023 மற்றும் 08.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
09.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
10.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
11.12.2023: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
12.12.2023: தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 32 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
விருதுநகர் AWS (விருதுநகர்), பொன்னமராவதி (புதுக்கோட்டை), நத்தம் (திண்டுக்கல்), சிங்கம்புணரி (சிவகங்கை), சாத்தியார் (மதுரை), அரிமளம் (புதுக்கோட்டை) தலா 7, வாடிப்பட்டி (மதுரை) 5, குடிமியான்மலை (புதுக்கோட்டை), புலிப்பட்டி (மதுரை), திருமயம் (புதுக்கோட்டை), ஆண்டிபட்டி (மதுரை) தலா 4, அருப்புக்கோட்டை (விருதுநகர்), மணமேல்குடி (புதுக்கோட்டை), வம்பன் KVK AWS (புதுக்கோட்டை) தலா 3, காரையூர் (புதுக்கோட்டை), ஸ்ரீமுஷ்ணம் (கடலூர்), தொண்டி (ராமநாதபுரம்), விருதுநகர் (விருதுநகர்) தலா 2, கொப்பம்பட்டி (திருச்சிராப்பள்ளி), மிமிசல் (புதுக்கோட்டை), கல்லந்திரி (மதுரை), வேதாரண்யம் (நாகப்பட்டினம்), பயணியர் விடுதி சிவகங்கை (சிவகங்கை), பெருங்களூர் (புதுக்கோட்டை), வடகுத்து (கடலூர்), ஜெயம்கொண்டம் (அரியலூர்), முத்துப்பேட்டை (திருவாரூர்), தஞ்சை பாபநாசம் (தஞ்சாவூர்), திருப்பத்தூர் (சிவகங்கை), ஆலங்குடி (புதுக்கோட்டை) தலா 1 செ.மீ மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
அரபிக்கடல் பகுதிகள்:
08.12.2023 மற்றும் 09.12.2023: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
10.12.2023: தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகள், லட்சத்தீவு பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.