- School College Leave: கனமழை எதிரொலி..! சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 4 மாவட்டங்களில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் நாளையும் (டிச.6) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வரலாறு காணாத அளவில் பெய்த கனமழையால் தேங்கியுள்ள வெள்ள நீர், பல இடங்களில் இன்னும் வடியாததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கனமழை காரணமாக கடந்த இரண்டு நாட்களும் பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையில், மாணவர்களின் பாதுகாப்பு கருதி நாளையும் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Rain Fall: தமிழகத்தில் பதிவான மழை விவரம்! அதிகபட்சமாக 45 செ.மீ பதிவு - எங்கு தெரியுமா?
மிக்ஜாம் புயல் காரணமாக நேற்று சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் தொடர் மழை பெய்தது. குறிப்பாக சென்னையில் அதிகபட்சமாக 45 செ.மீ மழை பதிவாகியுள்ளது. மழை பதிவு குறித்து வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையை பார்க்கலாம். பெருங்குடி ( சென்னை மாவட்டம்) 45, பூந்தமல்லி (திருவள்ளூர் மாவட்டம்) 34, ஆவடி (திருவள்ளூர் மாவட்டம்) 28, KVK காட்டுக்குப்பம் AWS (காஞ்சிபுரம் மாவட்டம்) 27, சென்னை (என்) (சென்னை மாவட்டம்), சென்னை (என்) ஏடபிள்யூஎஸ் (சென்னை மாவட்டம்), தாம்பரம் (செங்கல்பட்டு மாவட்டம்) தலா 24. மேலும் படிக்க
- CM Stalin On michaung: ரூ.4,000 கோடி செலவு வீணா? சென்னை எத்தனை நாளில் சீரடையும்? - முதலமைச்சர் ஸ்டாலின் விளக்கம்
சென்னை நேரு ஸ்டேடியம் பின்புறமுள்ள கண்ணப்பர் திடலில் உள்ள நிவாரண முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார். பின்பு செய்தியாளர்களை சந்தித்த அவர், “4000 கோடி ரூபாய்க்கு பணிகள் செய்தும் சென்னை மிதக்கிறது என்று சிலர் குற்றம்சாட்டுகின்றனர்.
4,000 கோடி ரூபாய் மதிப்பிலான பணிகள் நடந்ததால் தான், இவ்வளவு பெரிய வரலாறு காணாத, 47 வருடங்களில் இல்லாத அளவிலான மழை பெய்தும் சென்னை தப்பித்து உள்ளது. 4000 கோடி ரூபாய்க்கு திட்டமிட்டு செலவு செய்து பணிகள் நிறைவேற்றப்பட்டதால் தான் சென்னை உடனடியாக மீண்டு வருகிறது. மேலும் படிக்க
- Cyclone Michaung: மிரட்டிய மிக்ஜாம் புயல்! ”அனைவரும் இணைந்து இடரை எதிர்கொள்வோம்" - முதலமைச்சர் ஸ்டாலின்
மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில், கடந்த ஞாயிறு இரவு தொடங்கி நேற்று இரவு வரை கனமழை கொட்டி தீர்த்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு பெய்த கனமழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. சென்னையில் மாநகரின் செயல்பாடு என்பதே பெரும்பாலும் ஸ்தம்பித்துள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளை வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. மேலும் படிக்க
- Half Yearly Exam Postponed: மழை பாதிப்பால் பள்ளிகளில் அரையாண்டுத் தேர்வு ஒத்திவைப்பு?- கல்வித்துறை ஆலோசனை
பள்ளிகளில் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்வை ஒத்திவைக்கலாமா என்று கல்வித்துறை ஆலோசித்து வருகிறது. சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் மிக்ஜாம் புயலால் மழை கொட்டித் தீர்த்த நிலையில், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மழையால் ஏற்பட்ட பாதிப்புகள் இன்னும் தீராத நிலையில், நாளையும் (டிச.6) பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் 2023- 24ஆம் கல்வி ஆண்டில் தமிழ்நாட்டுக் கல்வி வாரியத்தில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. மேலும் படிக்க