• TN Rain Alert: 27 ஆம் தேதி வங்கக்கடலில் உருவாகும் புயல் சின்னம்! அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழ்நாட்டில் கனமழை எச்சரிக்கை!


தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 27-ஆம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் 29-ஆம் தேதி வாக்கில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும். கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, 3 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு சம்மன்; அமலாக்கத்துறை நோட்டீசுக்கு எதிராக தமிழக அரசு உயர் நீதிமன்றத்தில் வழக்கு


தமிழ்நாட்டில் சட்ட விரோதமாக பல மணல் குவாரிகள் செயல்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. கடந்த காலத்தில் மணல் குவாரிகள் தொடர்பான பல்வேறு வழக்குகளும், காவல்துறை நடவடிக்கைகளும் நடந்துள்ளது. இந்த நிலையில், மணல் குவாரிகள் விவகாரத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 10 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை விசாரணை செய்வதற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்தது. ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியிருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் படிக்க



  • Minister Ponmudi: விசாரணைக்கு வாங்க; அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன்


சட்டவிரோத பணப்பரிவர்த்தனை புகாரில், நவம்பர் 30ஆம் தேதி நேரில் ஆஜராக வேண்டும் என்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடிக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. நேற்று திமுக எம்.பி. கதிர் ஆனந்துக்கு சம்மன் அனுப்பப்பட்ட நிலையில், இன்று பொன்முடிக்கு அனுப்பப்பட்டுள்ளது. முன்னதாக, முறைகேடாக வேலைவாய்ப்பு வாங்கித் தருவதாக மோசடி செய்த வழக்கில் திமுக அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். மேலும் படிக்க



  • Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் குவியும் பக்தர்கள்.. கேரளாவிற்கு சிறப்பு ரயில்கள் இயக்கம்..


கேரள மாநிலம் பத்தினம் திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ் பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். அந்த வகையில் 16 ஆம் தேதி மண்டல மற்றும் மகர பூஜைக்காக நடை திறக்கப்பட்டது. 17 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக அனுமதிக்கப்பட்டனர். கார்த்திகை 1 ஆம் தேதி முதல் பக்தர்கள் ஐயப்பன் மாலை அணிந்து விரதம் இருந்து சாமி தரிசனம் செய்வார்கள். மேலும் படிக்க



  • Parandur Airport: பரந்தூர் விமான நிலைய திட்டத்தில் அடுத்த அதிரடி- 5746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த தமிழ்நாடு அரசு அரசாணை


சென்னை அடுத்த பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்திற்கு,  நிலம் கையகபப்டுத்த நிர்வாக ஒப்புதல் அளித்தது தமிழ் நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதில், 20 கிராமங்களில் ஐயாயிரத்து 746 ஏக்கர் நிலம் கையகப்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. நிலம் கையகப்படுத்தும் பணிகளுக்காக ரூ. 19.24 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதில் காஞ்சிபுரம் தாலுக்காவிற்கு உட்பட்ட 11 கிராமங்களிலும், ஸ்ரீபெரும்புதூர் தாலுக்காவிற்கு உட்பட்ட 9 கிராமங்களில் இருந்தும் நிலம் கையகப்படுத்தப்பட உள்ளது. மேலும் படிக்க