• Udhayanidhi Stalin:’நிதியைத்தான் கேட்டேன்.. தவறாக பேசவில்லை ’ - நிர்மலா சீதாராமன் குற்றச்சாட்டை மறுத்த அமைச்சர் உதயநிதி


தமிழ்நாட்டு மக்கள் கடும் பேரிடரில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதனை பேரிடர் என்று நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் ஏற்க மறுப்பது ஏன் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னையில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான வங்கிக்கடன் இணைப்பு விழா நடைபெற்றது. இதில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துக் கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த உதயநிதியிடம், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சொன்ன குற்றச்சாட்டு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. மேலும் படிக்க



  • கிறிஸ்துமஸ் விடுமுறை எதிரொலி: சொந்த ஊருக்கு படை எடுக்கும் மக்கள் - சென்னை அருகே கடும் போக்குவரத்து நெரிசல்


உலகம் முழுவதும் டிசம்பர் 25ஆம் தேதி கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட உள்ளது. தமிழ்நாட்டில் கிறிஸ்துமஸ் விழாவிற்கு அரசு விடுமுறை என்பதால் சனி, ஞாயிறு மட்டும் திங்கள் ஆகிய 3 நாட்கள் தொடர் விடுமுறை கிடைத்துள்ளது. தொடர் விடுமுறை காரணமாக, சென்னையில் இருந்து தென் மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு சொந்த ஊர்களுக்கு சென்னையில் இருப்பவர்கள் படையெடுக்க தொடங்கியுள்ளனர். இதனால், சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் பல்வேறு இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • TN Rain Alert: 29-ஆம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு.. அதிகாலையில் பனிமூட்டம்.. இன்றைய வானிலை நிலவரம்..


இந்தியப் பெருங்கடல் மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  அதன்படி, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க



  • Half Yearly Holidays: தொடங்கிய அரையாண்டு விடுமுறை: சிறப்பு வகுப்புகள் நடத்தத் தடை- ஜன.2 பள்ளிகள் திறப்பு


தமிழ்நாடு முழுவதும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 1 முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று முதல் (டிச.23) அரையாண்டு விடுமுறை தொடங்கி உள்ளது. ஜனவரி 1ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில், 2ஆம் தேதி மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. தமிழக பாடத் திட்டத்தின் கீழ் செயல்படும் அரசு, அரசு உதவிபெறும், தனியார் பள்ளிகளில் படிக்கும் 11, 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு டிசம்பர் 7ஆம் தேதி முதல் 22ஆம் தேதி வரை அரையாண்டுத் தேர்வு தொடங்கி நடைபெறுவதாக இருந்தது. மேலும் படிக்க



  • Latest Gold Silver Rate: ஷாக் கொடுக்கும் தங்கம் விலை.. ஒரு சவரன் ரூ. 47,000 க்கு விற்பனை.. இனிமேல் நிலவரம் என்ன?


சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120அதிகரித்து ரூ.47,000 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.15 அதிகரித்து ரூ.5,875 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.50,760 ஆகவும், கிராம் ஒன்று ரூ.6,345 ஆகவும் விற்பனையாகிறது.  சென்னையில் ஒரு கிராம் வெள்ளியின் விலை 50 காசுகள் குறைந்து ரூ.80.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி ரூ.80,500க்கு விற்பனையாகிறது. மேலும் படிக்க