திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து குறைந்தாலும் வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட மரங்கள், சகதிகள், கற்பாறைகள் அடியில் இருப்பதால் மக்கள் இறங்க வேண்டாம் என மாவட்ட ஆட்சியர் கார்த்திகேயன் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.


இது தொடர்பான அறிவிப்பில், “தாமிரபரணி ஆற்றில் நீர்வரத்து பெரிய அளவில் குறைந்து இருந்தாலும் ஆங்காங்கே இருந்து அடித்து வரப்பட்ட மரங்கள், புதர் செடிகள், பாறைகள் ஆங்காங்கே நீருக்கடியில் உள்ளன. மேலும் பல்வேறு நீர்நிலைகளில்  சகதி அதிகமாக உள்ளது. 


எனவே தாமிரபரணி ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளுக்குள் இறங்கினால் இதுபோன்ற புதர்கள், கற்பாறைகள், சகதிகளில் சிக்கிக் கொள்ளக்கூடிய அபாயம் உள்ளது. அவ்வாறு சிக்கிக்கொண்டால் மீட்பதும் மிகவும் கடினமாகும்.


எனவே பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகள், கால்வாய்கள், ஏரிகள் குளங்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைக்குள்ளும் இறங்க வேண்டாம் எனவும் கால்நடைகளையும் இறக்க வேண்டாம் எனவும் எச்சரிக்கை விடுக்கப்படுகிறது” என குறிப்பிடப்பட்டுள்ளது.