• CM Stalin on Sankaraiah: குறுகிய மனம்‌ படைத்த சிலரது சதியால் சங்கரய்யாவுக்குக் கிடைக்காத முனைவர் பட்டம்: முதல்வர் ஸ்டாலின் வேதனை!


தமிழ்நாட்டின்‌ விடுதலைப்‌ போராட்ட வரலாற்றை அறியாத - குறுகிய மனம்‌ படைத்த சிலரது சதியால், சங்கரய்யா‌வுக்கு முனைவர் பட்டம் வழங்குவது நடந்தேறாமல்‌ போனதை எண்ணி‌ மனம்‌ வருந்துவதாக முதல்வர் ஸ்டாலின் வேதனை தெரிவித்துள்ளார்.  தகைசால்‌ தமிழர்‌, விடுதலைப்‌ போராட்ட வீரர்‌ தோழர்‌ என்‌. சங்கரய்யா‌ மறைவுக்கு தமிழ்நாடு முதலமைச்சர்‌ ஸ்டாலின்‌ இரங்கல்‌ செய்தி வெளியிட்டுள்ளார். மேலும் படிக்க



  • Sankaraiah: சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி.. பல்வேறு அரசியல் தலைவர்கள் இரங்கல்..


சென்னை அப்போலோ மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் சங்கரய்யா உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து, அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, சேகர்பாபு, தா.மோ.அன்பர்சன் ஆகியோரும் அஞ்சலி செலுத்தினர். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தற்போது அஞ்சலி செலுத்திய பின் இந்திய கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முத்த தலைவர் தோழர் என்.சங்கரய்யா அவர்களின் உடல் இன்று 12 மணிக்கு குரோம்பேட்டை யில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டு, மதியம் 3 மணிக்கு கட்சியின் மாநிலக்குழு அலுவலகத்திற்கு கொண்டுவரப்படும். மேலும் படிக்க



  • TN Rain Alert: காற்றழுத்த தாழ்வுமண்டலமாக வலுப்பெறும்; மழை தொடரும்;வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக கடலோர தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால், சென்னை, தஞ்சாவூர், நாகை, திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும் படிக்க



  • TN Rain Alert: டெல்டா மாவட்டங்களில் கனமழை தொடரும் - சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் தகவல்


தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த ஆறு மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று இந்திய வானிலை மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவிக்கையில்.” அடுத்த 24 மணி நேரத்தில் கடலோர மாவட்டங்களில் லேசான மற்றும் கன மழை பெய்ய கூடும். மேலும் படிக்க



  • Sankaraiah Politics: தகைசால் தமிழரான சங்கரய்யாவின் அரசியல் பயணம்.. 102 வயது வரை கடந்து வந்த பாதை


1922ம் ஆண்டு ஜூலை 15ம் தேதி தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள ஆத்தூரில் பிறந்த சங்கரய்யாவின் இயற்பெயர் பிரதாப சந்திரன். மாணவப் பருவத்திலேயே பொதுவாழ்வில் தன்னை அர்ப்பணித்துகொண்டார். நீண்ட நெடிய போராட்ட களங்களை கண்ட சங்கரய்யாவின் வரலாற்றில் முதல் போராட்டமே இந்தித் திணிப்புதான். 1938-ல் உயர்நிலைப் பள்ளிகளில் இந்தியைக் கட்டாயப் பாடமாக்கும் சட்ட மசோதாவைச் அன்றைய முதலமைச்சர் ராஜாஜி சட்டமன்றத்தில் தாக்கல் செய்தார். மேலும் படிக்க