TN Weather Update: தமிழகத்திற்கு பாதிப்பா? REMAL புயலின் தாக்கம் எங்கெல்லாம்? - முழு விவரம்


நேற்று தென்மேற்கு  வங்கக்கடல்   பகுதியில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து இன்று காலை 08:30 மணி அளவில்  மத்தியமேற்கு மற்றும் அதனை   ஒட்டியுள்ள   தெற்கு  வங்கக்கடல்   பகுதிகளில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக நிலவுகிறது. இது மேலும் வடகிழக்கு திசையில் நகர்ந்துமேலும் படிக்க


TN Government: முதலமைச்சர் ஸ்டாலினின் திட்டங்கள்..வேளாண் துறையில் முன்னணி மாநிலமாக திகழும் தமிழ்நாடு!


முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பதவியேற்றது. அவரது ஆட்சியில் வேளாண்மைத்துறை என அதுவரை அழைக்கப்பட்ட துறையின் பெயர் வேளாண்மை -உழவர் நலத்துறை என மாற்றம் செய்யப்பட்டது. இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு மேலும் படிக்க


ரசாயனங்கள் மூலம் பழுக்க வைக்கப்பட்ட தலா 500 கிலோ மா, வாழை: அதிகாரிகளின் அதிரடி முடிவு


திருவண்ணாமலை நகரில் உள்ள பல்வேறு பழ மண்டிகளில் மாம்பழங்கள் மற்றும் வாழைப்பழங்கள் செயற்கையாக பழுக்க வைக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைக்கின்றது. இதன் அடிப்படையில் இன்று காலை முதல் தேரடி வீதி, திருமஞ்சன கோபுர வீதி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நான்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். இது தொடர்பான கூடுதல் தகவல்களுக்கு மேலும் படிக்க


Yercaud Flower Show: ஏற்காடு கோடை விழா - சுற்றுலா பயணிகளுக்கு விருந்தளிக்க காத்திருக்கும் 7 லட்சம் மலர்கள்


ஏற்காட்டில் 47வது கோடை விழா மற்றும் மலர் கண்காட்சி இன்று தொடங்கி மே மாதம் 26 ஆம் தேதி வரை ஐந்து நாட்கள் நடைபெற உள்ளது. இதற்கான பணிகளை தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை, வனத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் இணைந்து செய்து வருகிறது. இது தொடர்பான விரிவான செய்திகளுக்கு மேலும் படிக்க


Salem Flood: மலைப்பகுதிகளில் கொட்டி தீர்த்த கனமழை - நகருக்குள் புகுந்த காட்டாற்று வெள்ளம்


சேலம் மாவட்டம் ஜருகுமலை மற்றும் கந்தாஸ்ரமம் பகுதியில் பெய்த கனமழை காரணமாக காட்டாற்று வெள்ளம் நகருக்கள் புகுந்தது. இதனால் புறவழிச்சாலைகளில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால் போக்குவரத்து மூன்று மணி நேரத்திற்கும் மேலாக கடுமையாக பாதிக்கப்பட்டது. சேலத்தில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக நாள்தோறும் மழை பெய்து வருகிறது. முழுக் கட்டுரையைப் படிக்க மேலும் படிக்க


6 பேருக்கு மறுவாழ்வு கொடுத்த டீ மாஸ்டரின் மனைவி - வேலூரில் நெகிழ்ச்சி


வேலூர் மாவட்டம் கே.வி.குப்பம் தாலுகாவுக்குட்பட்ட சென்னங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த டீ மாஸ்டர் சசிகுமார். இவருடைய  மனைவி சத்யா வயது (41). எம்.ஏ.வரலாறு பட்டம் பெற்றுள்ள சத்யா வேலைக்கு செல்லாமல் குடும்பத்தை கவனித்து வந்துள்ளார் . இந்த தம்பதிக்கு ஒரு மகன், ஒரு மகள் இருக்கின்றனர். மகன் பி.டெக் முதலாம் ஆண்டு படிக்கிறார். மகள் தற்போது பிளஸ்-2 முடித்துவிட்டு உயர்க்கல்விப் பயிலவிருக்கிறார். பிள்ளைகளின் கல்வி மற்றும் தொழில் காரணமாக குடியாத்தம் எழில் நகரில் தங்கியிருந்தனர். இந்த நிலையில், கடுமையான தலைவலியால் அவதிப்பட்டுவந்த சத்யா... என்ன நடந்தது என்பதைத் தெரிந்து கொள்ள மேலும் படிக்க