தமிழ்நாட்டில் ஐபிஎஸ், ஐஏஎஸ் அதிகாரிகள் அண்மையாக தொடர்ந்து தமிழக அரசால் பணியிடமாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இந்தநிலையில் தற்போது 48 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு இன்று (ஜனவரி 7) உத்தரவிட்டுள்ளது.


பதவி உயர்வு:



இதில் 16 ஐபிஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு அளித்துள்ளது தமிழ்நாடு அரசு. ஐஜி ஆர்.தமிழ் சந்திரனுக்கு கூடுதல் டிஜிபியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. மகளிர் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றத்தடுப்பு கூடுதல் டிஜிபியாக ஆர்.தமிழ்சந்திரன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


வி.ஜெயஸ்ரீக்கு ஐஜியாக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காவல்துறை நடவடிக்கை பிரிவு ஐஜியாக வி.ஜெயஸ்ரீ நியமிக்கப்பட்டுள்ளார். ஐபிஎஸ் அதிகாரி எஸ்.லஷ்மி சென்னையில் ஆயுதப்படை பிரிவு ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு ஐஜியாக சாமுண்டீஸ்வரி நியமனம் செய்யப்பட்டுள்ளார். எஸ்.ராஜேஸ்வரி தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரிய உறுப்பினராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை தெற்கு போக்குவரத்து காவல்துறை ஆணையராக பாண்டி கங்காதர் நியமிக்கப்பட்டுள்ளார்.






தமிழ்நாடு கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் எஸ்.பியாக மேகலினா ஐடன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னையில் தீவிரவாத தடுப்புப்பிரிவு எஸ்பியாக புக்யா சினேக பிரியா நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை தென்மண்டல குடிமைப் பொருள் வழங்கல் துறை எஸ்பியாக ஆர்.ராமகிருஷ்ணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.


எஸ்.ராஜேந்திரன் ஆவடியில் தலைமையகம் போக்குவரத்து காவல் கூடுதல் ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவ்வாறாக மொத்தம் 48 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.


 


மேலும் படிக்க: CM Stalin: பெரும் துயரம்! சிறுத்தை தாக்கி 2 பேர் உயிரிழப்பு - ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!


 


மேலும் படிக்க: ஞானவாபி மசூதி: இந்திய தொல்லியல் துறையின் ஆய்வு வெளியிடப்படுமா? நீதிமன்றம் பரபர முடிவு