தமிழ்நாட்டில் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த ஒரு வாரமாக கடுமையாக அதிகரித்து வருகிறது. கடந்த மூன்று தினமாக 10 ஆயிரத்திற்கும் அதிகமாக காணப்பட்டு வந்த பாதிப்பு இன்று 13 ஆயிரத்து 990 ஆக அதிகரித்துள்ளது. இந்த பாதிப்புகள் பொங்கல் பண்டிகையில் மேலும் அதிகரிக்கும் என்று மருத்துவ வல்லுனர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.




இந்த நிலையில், பொங்கல் பண்டிகையில் பொதுமக்கள் கூட்டம் கூடுவதைத் தவிர்க்கும் விதமாக தமிழ்நாடு அரசு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதன்படி,



  1. வரும் 14ஆம் தேதி முதல் 18ஆம் தேதியான தைப்பூசம் வரை அனைத்து வழிபாட்டு தலங்களிலும் பொதுமக்கள் நேரடியாக சென்று வழிபட அனுமதி இல்லை

  2. 16ஆம் தேதியான ஞாயிற்றுக்கிழமை அன்றும் 2வது முறையாக முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும்

  3. பொதுமக்களின் நலன் கருதி, பொங்கலுக்கு வெளியூர் செல்லும் பேருந்துகளில் 75% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

  4. இரவு ஊரடங்கு வரும் ஜனவரி 31-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


ஏற்கனவே தமிழ்நாட்டில் தற்போது இரவு ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இருப்பினும், இரவு ஊரடங்கின்போது பொதுமக்களின் நலன் கருதி மாவட்டத்திற்கு உள்ளேயும், மாவட்டத்திற்கு வெளியேயும் போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது.


அதே சமயத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு இன்று பிறப்பித்துள்ள உத்தரவிலும்,. கொரோனா தடுப்பு விதிமீறல்களில் ஈடுபடும் நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் மீது நடவடிக்கை எடுத்து அபராதம் விதிக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.




நோய் கட்டுப்பாட்டு பகுதிகளில் தீவிரமாக நோய்த் தொற்று பரவலை வீடு,வீடாக கண்காணிக்க குழுக்கள் அமைத்து கண்காணிக்கப்பட உள்ளது. பொதுமக்கள் வெளி இடங்களில் செல்லும்போது முகக்கவசம் அணிவது கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்தாதவர்கள் இரண்டு தவணையை விரைவில் செலுத்துமாறும் அறிவுறுத்தப்படுகிறது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: Siddharth Tweet | சாய்னா நேவாலை குறித்து சித்தார்த் பதிந்த மோசமான ட்வீட்.. வலுக்கும் கண்டனங்கள்..


அறிவிக்கப்படும் எண்ணிக்கையை விட 7 மடங்கு கொரோனா இறப்பு அதிகம்.. ஆய்வில் அதிர்ச்சி தகவல்


”மனைவியுடன் தனியா வரணும்” : குடும்பத்துடன் தீக்குளித்த தொழிலதிபர்.. ஆளுங்கட்சி எம்.எல்.ஏ மகன் மீது வலுக்கும் கண்டனங்கள்..