பஞ்சாப் சென்ற பிரதமர் நரேந்திர மோடி பாதுகாப்பு குறைபாடு காரணமாக திரும்பி சென்ற சம்பவத்தை கண்டித்து சேலத்தில் இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் தலைமையில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  ரயில் மறியல் போராட்டத்தை காவல்துறையினர் தடுத்ததால் போராட்டக்காரர்களுக்கும், காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனையடுத்து ரயில் நிலையம் முன்பாக சாலையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட அர்ஜுன் சம்பத் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்டோர்  போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர்.


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- ஆன்டி இந்தியன் பட தயாரிப்பாளர் முகமது ரபிக் பெயரை ரவுடிகள் பட்டியலில் இருந்து நீக்க உத்தரவு


 



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- கரூர் அருகே ஜல்லிக்கட்டுக்கு தயாராகி வந்த காளை உயிரிழப்பு - ஒப்பாரி வைத்து பொதுமக்கள் கண்ணீர் அஞ்சலி


சேலம் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் காவல் துறையினர் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தி பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது ரயிலை மறிப்பதற்காக ரயில் நிலையம் நோக்கி வந்த அர்ஜூன் சம்பத் உள்ளிட்ட இந்து மக்கள் கட்சியினரை உள்ளே செல்லவிடாமல் தடுத்து நிறுத்தினர். இதனால் காவல்துறையினருக்கும் கட்சியினருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- பொங்கல் பரிசுத்தொகுப்பில் 2.5 டன் கெட்டுப்போன வெல்லம் - திரும்பி எடுத்துச்செல்ல உத்தரவிட்ட ஆட்சியர்


 



மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- திருவண்ணாமலையில் மான் கொம்பு வைத்திருந்த திமுக பிரமுகர் கைது - உரிமம் இல்லாத நாட்டுத்துப்பாக்கி பறிமுதல்


பின்னர் செய்தியாளர்களை சந்தித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத், காங்கிரஸ், கம்யூனிஸ்டுகள் இணைந்துதான் பஞ்சாப் மாநிலத்திற்குள் பிரதமர் மோடியை வரவிடாமல் தடுத்துள்ளனர். இதனால் பிரதமரின் வாகனம் 20 மணி நேரம் பஞ்சாப் மாநிலத்தில் பாலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது கண்டிக்கத்தக்க செயலாகும். தீவிரவாதிகளை கொண்டு பஞ்சாபை ஆளும் காங்கிரஸ் அரசாங்கம் இவ்வாறு நடந்து கொண்டது. இதனால் பிரதமர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.  பஞ்சாப் மாநில அரசின் மீது நடவடிக்கை எடுத்து ஆட்சியைக் கலைத்து ஜனாதிபதி ஆட்சியை கொண்டுவர வேண்டும் மற்றும் பிரதமரின் பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும். 


மேலும் செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்:- Pongal 2022 | குக்கர் பொங்கலுக்கு குட் பை சொல்லுங்க’- மண்பானைகளை நியாய விலைக்கடைகளில் வழங்க குயவர்கள் கோரிக்கை