தமிழ்நாடு சட்டசபை கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. முதல் நாளான நேற்று மறைந்த முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், விக்கிரவாண்டி எம்.எல்.ஏ. புகழேந்தி மறைவுக்கு இரங்கல் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அவை ஒத்திவைக்கப்பட்டது.


1 லட்சமாக கல்வி உதவித்தொகை உயர்வு:


இந்த நிலையில், இன்று மாற்றுத்திறனாளிகள நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்றைய மானியக் கோரிக்கை விவாதத்தின்போது சில முக்கிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். அந்த அறிவிப்புகளின் விவரங்களை கீழே காணலாம்.




    • ஆராய்ச்சி படிப்பு எனப்படும் Ph.D மேற்கொள்ளும் 50 மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு தலா ரூபாய் 1 லட்சம் கல்வி உதவித்தொகை

    • புற உலகச் சிந்தனையற்ற மதி இறுக்கமுடைய அதாவது ஆட்டிசம் குறைபாடு கொண்ட 5 ஆயிரத்து 81 மாற்றுத்திறனாளிகளுக்கு மாதந்தோறும் ரூபாய் 2 ஆயிரம் பராமரிப்பு உதவித்தொகை வழங்குவதற்கு கூடுதலாக ரூபாய் 12.20 கோடி ஒதுக்கீடு

    • 200 மாற்றுத்திறனாளிகளுக்கு உணவு மற்றும் தங்கும் விடுதி வசதியுடன் அரசுப் போட்டித் தேர்வுகளில் வெற்றி பெறச் சிறப்பு பயிற்சி.






  • 10 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்ட ஸ்கூட்டர்களுக்கு மாற்றாக புதிய வாகனங்கள், 3 ஆண்டுகளுக்கு முன்பு வழங்கப்பட்டு பழுதாகிய காதொலிக் கருவிகள், ப்ரெய்லி கைக்கடிகாரங்களுக்கு பதிலாக புதிய கருவிகள் வழங்கக் கூடுதல் நிதி ஒதுக்கீடு

  • சிறப்பு பள்ளிகள் மற்றும் இல்லங்களில் தங்கிப் பயிலும் மாற்றுத்திறனாளிகளின் மாத உணவூட்டு மானியம் உயர்வு


புதிய ஸ்கூட்டர்கள்:


ஆகிய அறிவிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த அறிவிப்புகள் மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, ஆராய்ச்சி படிப்பு படிக்கும் மாணவர்களுக்கான உதவித்தொகை 1 லட்சமாக உயர்த்திருப்பது உயர்கல்வி படிக்கும் மாற்றுத்திறனாளி மாணவர்கள் மத்தியில் ஆர்வத்தை அதிகரித்துள்ளது.


மேலும், மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்ட பழைய ஸ்கூட்டர்களுக்கு பதிலாக புதிய ஸ்கூட்டர்கள் வழங்குவதாக அறிவித்திருப்பதற்கும் பலரும் வரவேற்பைத் தெரிவித்து வருகின்றனர்.


மேலும் படிக்க: Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு


மேலும் படிக்க: கள்ளச்சாராய கோரம்! உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம் என்ன? அமைச்சர் மா.சுப்பிரமணியன் விளக்கம்