✕
  • முகப்பு
  • தமிழ்நாடு
  • இந்தியா
  • உலகம்
  • சென்னை
  • கோவை
  • மதுரை
  • தஞ்சாவூர்
  • சேலம்
  • திருச்சி
  • நெல்லை
  • வேலூர்
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவண்ணாமலை
  • மயிலாடுதுறை
  • சினிமா செய்திகள்
  • சினிமா விமர்சனம்
  • பிக் பாஸ் தமிழ்
  • தொலைக்காட்சி
  • கிரிக்கெட்
  • ஐபிஎல் 2024
  • கால்பந்து
  • கல்வி
  • ஜோதிடம்
  • வெப் ஸ்டோரீஸ்
  • அரசியல்
  • ஆன்மிகம்
  • ட்ரெண்டிங்
  • க்ரைம்
  • பிக் பாஸ் சீசன் 7
  • JOBS ALERT
  • வணிகம்
  • லைப்ஸ்டைல்
  • கேலரி
  • உணவு
  • தொழில்நுட்பம்
  • ஆட்டோ
  • IDEAS OF INDIA
  • தொடர்பு கொள்ள

Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு

செல்வகுமார்   |  21 Jun 2024 06:16 PM (IST)

Tasmac Income: டாஸ்மாக் மூலம் வருமானமானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

டாஸ்மாக்

டாஸ்மாக் மூலம் வருமானமானது கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டில் ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளதாக தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மானியக் கோரிக்கை விவாதம்:

கடந்த பிப்ரவரி மாதம் 19, 20 ஆகிய தேதிகளில் பொது பட்ஜெட் மற்றும் வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், பட்ஜெட் மீதான விவாதமானது பிப்ரவரி 22ஆம் தேதி வரை மட்டுமே நடைபெற்றது. மக்களவைத் தேர்தல் காரணமாக, மானியக் கோரிக்கைகள் தொடர்பான விவாதமானது நடத்தப்படாமல், சட்டசபை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2ஆம் பாகமானது,  ஜூன் 19 ஆம் தேதி முதல் ஜூன் 29ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

45, 855.67 கோடி வருமானம்:

தமிழ்நாடு அரசின் பட்ஜெட் கூட்டத்தொடரின் 2 ஆம் பாகமானது, ஜூன் 19 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்று வரும் மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், மது விற்பனை குறித்து தெரிவிக்கப்பட்டது. 

அப்போது தெரிவிக்கப்பட்டதாவது, தமிழ்நாட்டில் 2023-24 ம் ஆண்டில் டாஸ்மாக் வருமானம், 45, 855.67 கோடியாக உள்ளது என தமிழ்நாடு அரசின் கொள்கை விளக்க குறிப்பில்  தகவல் தெரிவிக்கப்பட்டது.  இந்நிலையில், கடந்த ஆண்டை விட ரூ. 1, 734 கோடி அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தொடர்ந்து அதிகரிக்கும் டாஸ்மாக் வருமானம்:

2018-19ஆம் நிதியாண்டில் 30 ஆயிரம் கோடியை தாண்டிய டாஸ்மாக் வருமானமானது, 2022-2023ஆம் நிதியாண்டில் 40 ஆயிரம் கோடியை தாண்டியது. இதையடுத்து 2022-23 ஆண்டில் டாஸ்மாக் மூலம் ரூ.44,098 கோடி வருவாய் இருந்த நிலையில், 2023-24 ஆம் ஆண்டு நிதியாண்டில் 1, 734 கோடி அதிகரித்து 45, 855.67 கோடியாக உயர்ந்துள்ளது. 

Also Read: Methanol Effects: மெத்தனால் உடலில் முதலில் எதையெல்லாம் பாதிக்கும், அழிக்கும் - மருத்துவர்களின் அதிர்ச்சி தகவல்

Published at: 21 Jun 2024 05:54 PM (IST)
Tags: tamilnadu Income Assembly Session breaking news Abp nadu TASMAC Session
  • முகப்பு
  • செய்திகள்
  • தமிழ்நாடு
  • Tasmac Income: டாஸ்மாக் வருமானம்: கடந்த ஆண்டைவிட ரூ. 1, 734 கோடி அதிகரிப்பு
About us | Advertisement| Privacy policy
© Copyright@2026.ABP Network Private Limited. All rights reserved.