தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வருகிற 19ஆம் தேதி நடக்கிறது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை விழுப்புரம், திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய 3 நகராட்சிகளில் 102 நகரமன்ற உறுப்பினர் பதவிகளுக்கும், அனந்தபுரம், அரகண்டநல்லூர், செஞ்சி, மரக்காணம், திருவெண்ணெய்நல்லூர், வளவனூர், விக்கிரவாண்டி ஆகிய 7 பேரூராட்சிகளில் 108 பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கும் ஆக மொத்தம் 210 பதவியிடங்களுக்கு தேர்தல் நடக்கிறது.
இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு பதற்றமான வாக்குச்சாவடி மையங்களை போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு அந்த வாக்குச் சாவடி மையங்கள் அமைந்துள்ள பகுதியின் காவல் நிலைய பொறுப்பு அதிகாரிகளை போதிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Vijayakanth: டாஸ்மாக் பார்களை மூட நீதிமன்றம் உத்தரவு: விஜயகாந்த் வரவேற்பு
தேர்தல் சமயத்தில் சட்டம்- ஒழுங்கை சீர்குலைக்கும் நோக்கத்தில் யாரேனும் செயல்படுவதை தடுக்கும் வகையிலும் தேர்தல் எந்தவித அசம்பாவிதமும் இன்றி அமைதியாக நடைபெற முதல் நடவடிக்கையாக ரவுடிகள், தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்ட பழைய குற்றவாளிகள் மற்றும் சந்தேக நபர்களின் நடமாட்டத்தை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அதோடு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடிகளை கைது செய்யும்படி போலீசாருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.
Dr Ravindranath Speech: ஆளுநர் தமிழ்நாட்டு மக்களை இழிவுப்படுத்துகிறார் - டாக்டர் ரவீந்திரன் ஆவேசம்
இதையடுத்து விழுப்புரம், செஞ்சி, திண்டிவனம், கோட்டக்குப்பம் ஆகிய காவல் உட்கோட்டங்களுக்குட்பட்ட காவல் நிலையங்களில் ரவுடிகள் பட்டியலில் உள்ளவர்களை போலீசார் கைது செய்ய முடிவு செய்து அதற்கான நடவடிக்கையில் இறங்கியுள்ளனர். அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் இதுவரை 94 ரவுடிகளை போலீசார், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைது செய்துள்ளனர்.
இவர்களில் பலர், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலின் போது தாங்கள் எந்தவித சட்டம்- ஒழுங்கு பிரச்சினையிலும் ஈடுபட மாட்டோம் எனவும், அப்படி மீறி பிரச்சினைகளில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்க ஒப்புதல் பத்திரங்களை போலீசாரிடம் எழுதி கொடுத்து வருகின்றனர். ரவுடிகள் மற்றும் தொடர் குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களை கைது செய்யும் பணி தொடரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைதள பக்கங்களிலும் பின் தொடரலாம்