மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகா மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் அதிக பயன் கிடைக்கும்  என கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளார். 


சென்னையில் கர்நாடக துணை முதல்வர் ஆய்வு:


சென்னையில் குப்பைகள் எவ்வாறு மேலாண்மை செய்யப்படுகிறது என்பதை தெரிந்து கொள்வதற்காக, கர்நாடக மாநிலத்தின் துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் இன்று ஆய்வு மேற்கொண்டார். 


சென்னை வந்துள்ள டி.கே.சிவக்குமார், சேத்துப்பட்டில் உள்ள சென்னை மாநகராட்சி மற்றும் தனியார் நிறுவனத்தின் பங்களிப்போடு இயங்கி வரும் பயோ-சி.என்.ஜி இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தை  ஆய்வு செய்தார். இத்திட்டத்தை ஆய்வு செய்து, கர்நாடகாவில் செயல்படுத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 


சேத்துப்பட்டில் செயல்பட்டு வரும் இயற்கை எரிவாயு உற்பத்தி மையத்தின் மூலம் நாள்தோறும் சுமார் 4800 கிலோ எரிவாயு கிடைப்பதாக கூறப்படுகிறது. இதன் மூலம் , தினசரி 324 சிலிண்டர்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்படுவதாக் கூறப்படுகிறது.


”தமிழ்நாட்டுக்குத்தான் அதிக பயன்”


அப்போது, செய்தியாளர்களை சந்தித்த துணை முதல்வர் டி.கே.சிவக்குமார் “ மேகதாது அணை கட்டப்பட்டால் கர்நாடகா மாநிலத்தைவிட தமிழ்நாடு மாநிலத்திற்குத்தான் அதிக பயன் கிடைக்கும் என தெரிவித்தார். மேலும் , கர்நாடகாவில் பெய்யும் மழையால், தமிழ்நாடுதான் அதிக பலன் பெறும் என டி.கே.சிவக்குமார் தெரிவித்தார். 


Also Read: Mettur Dam: ”மீண்டும் சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து” கவலையில் விவசாயிகள்.. என்ன காரணம்..?


தமிழ்நாடு விவசாயிகள் போராட்டம்:


சில் மாதங்களுக்கு முன்பு, மேகதாது அணை கட்டுமான பணியை தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்டெடுக்க வேண்டும். ராசியின் மணல் அணை கட்டுமானத்தை துவங்க வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி காவிரி மேகதாது அணை எதிர்ப்பு போராட்டக் குழு சார்பில் தஞ்சாவூர் பழைய கலெக்டர் அலுவலகம் பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.


அப்போது விவசாயிகள் தெரிவித்திருந்ததாவது, கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவக்குமார் ஆகியோர் தேர்தல் பிரச்சாரத்தில் மேகதாதுவில் அணை கட்ட இருப்பதாக மக்களிடம் வாக்குறுதி அளித்திருக்கின்றனர். கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட தீர்மானம் நிறைவேற்றி, மத்திய அரசுக்கு அனுப்பி உள்ளது. எந்த நேரமும் மோடி அரசு அணை கட்டுவதற்கு அனுமதி கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது. காவிரி மேலாண்மை ஆணையத்தின் செயல்பாடுகள் அனைத்தும் கர்நாடக அரசுக்கு ஆதரவாகவே உள்ளது எனவும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.


Also Read: TVK' Party Conference : “தமிழக வெற்றிக் கழக மாநாட்டில் ராகுல், சந்திரபாபு நாயுடு?” விஜயின் பலே திட்டம்..!