நவம்பர் மாதம் முதல் பாதி முடிந்துள்ள நிலையில், இரண்டாம் பாதியிலும் சென்னைக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது . நவம்பர் 17 முதல் 19-ம் தேதி வரை சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களில் கனமழை ஏற்பட வாய்ப்பு இருக்கு என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வங்கக்கடலில் அந்தமான் அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலவுகிறது. இந்நிலையில் மேலும் ஒரு காற்றழுத்த தாழ்வு நிலை உருவாக்ககூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதனால், நவம்பர் 15, 16 தேதிகளில் தமிழ்நாட்டின் 19 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈரோடு, நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம், கரூர், திருச்சி, பெரம்பலூர், புதுவை பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் நகரின் ஒரு சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும் என தென்மண்டல வானிலை ஆய்வு மைய தலைவர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார். மேலும், நவம்பர் 17, 18-ம் தேதிகளில் சென்னையில் கன மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, வேலூர், விழுப்புரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை மற்றும் டெல்டா மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்றைய முக்கியச் செய்திகள்...
ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்