நல்ல தண்ணீர் தேங்குதா? எச்சரிக்கை.. அதிகமாக பரவும் டெங்கு.. அறிகுறிகள், சிகிச்சைகள் இதோ..மக்களே உஷார்..

டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, எப்படி அது பிறருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அது வேறுபடும்? அதற்கான விளக்கம் கீழே... 

Continues below advertisement

மழை சீசன்! மிளகாய் பஜ்ஜி..இளையராஜா பாடல் என இந்த சீசனுக்கு ரொமான்ஸ் ஒரு பக்கம் பஞ்சமிருக்காது என்றாலும் கிளைமட் சேஞ்ச், காய்ச்சல் என மருத்துவர்களிடம் செல்லுபவர்கள் எண்ணிக்கையிலும் பஞ்சமிருக்காது. அந்த வகையில் இது டெங்கு நோய்க்கான சீசன். இம்மியளவு கொசுவால் என்ன செய்துவிடமுடியும் என்பதற்கு டெங்கு காய்ச்சல் உதாரணம். 

Continues below advertisement

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பரவ ஆரம்பித்த டெங்கு இன்று நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் சமாளிக்க முடியாத நோயாக உருவாகியுள்ளது. தமிழ்நாட்டில்  சில வருடங்களாகவே ‘மர்ம காய்ச்சல்’ என்கிற பெயரில்  டெங்கு காய்ச்சலின் தாக்கம் நிலவி வருகிறது. 

டெங்கு குறித்து மக்கள் மத்தியில் போதுமான விழிப்புணர்வு இல்லாததே காய்ச்சல் பரவுவதற்கும் காரணம் என்கிறார்கள் மருத்துவர்கள். டெங்கு காய்ச்சல் வரக் காரணம் என்ன, எப்படி அது பிறருக்குப் பரவுகிறது, மற்ற காய்ச்சல்களிலிருந்து எப்படி அது வேறுபடும்? அதற்கான விளக்கம் கீழே... 

வைரஸ் எப்படி உருவாகிறது? 
டெங்கு  ஒரு வகை வைரஸால் பரவும் நோய்.டென்-1 (DENV-1), டென்-2 (DENV-2), டென்-3 (DENV-3), மற்றும் டென்-4 (DENV-4) என நான்கு வகை டெங்கு வைரஸ்கள் உள்ளன. 

கழிவு நீர் சாக்கடை நீர் என இல்லாமல் இந்த வகை வைரஸ்கள் நல்ல நீரில்தான் உருவாகும். எகிப்தில்தான் முதன்முதலில் நல்ல தண்ணீரில் உருவாகக்கூடிய `ஏடிஸ் எகிப்தி' (Aedes Aegypti) என்ற ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. எகிப்தின் அலெக்சாண்டிரியா மற்றும் கைரோ நகரங்களை ஒருகாலத்தில் இந்தக் கொசுக்கள் தலைகீழாக்கியதாக வரலாறு உண்டு. இவை மூன்று வாரங்களுக்கு மேல் உயிர் வாழும். பகல் நேரங்களில் கடிக்கும். காலில் வெள்ளை நிறப் புள்ளிகளுடன் இவை மாற்ற கொசுக்களில் இருந்து மாறுபட்டிருக்கும். நீர் தேங்கி நிற்கும் எதிலும் இந்த வகை கிருமிகள் உருவாக வாய்ப்பு உண்டு. வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், தண்ணீருக்காகத் தோண்டப்பட்ட குழிகள், மொட்டைமாடிகளில் கிடக்கும் தேங்காய் மூடி, காலி டப்பா அல்லது தண்ணீர் தேங்கக் கூடிய ஏதேனும் உபயோகமற்றப் பொருட்கள், சரியாக மூடப்படாத தொட்டிகள், போன்றவற்றில் இவை முட்டையிடுகின்றன. இது டெங்கு பாதிப்புள்ள ஒருவரைக் கடித்துவிட்டு மற்றவரைக் கடிப்பதிலிருந்து காய்ச்சல் பரவுகின்றன. கொரோனா போன்ற மற்ற வைரஸ்களைப் போல மனிதர்களுக்கு மனிதர் நேரடித் தொடர்பால் பரவாது. கொசுக்கள் உருவாகும் இடத்தைச் சரிவரப் பராமரித்து நீர் தேங்காமல் பார்த்துக்கொள்வதே இதற்கான ஃபர்ஸ் எய்ட். 

நோய் வந்தால், காய்ச்சல், தலைவலி, உடல்வலி, வாந்தி, சோர்வு, கண்ணுக்குப் பின்புறம் வலி, எலும்புகளில் வலி போன்றவை அதற்கான அறிகுறிகள். காய்ச்சல் அறிகுறிகள் தென்பட்டவுடன் மருத்துவரை அணுகுவது மட்டுமே இதற்கான சரியான தீர்வு. 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator

Continues below advertisement
Sponsored Links by Taboola