கோவையில் ஆசிரியரால் பாலியல் தொல்லைக்கு ஆளானதாக கூறப்ப்படும்  17 வயது பள்ளி மாணவி தற்கொலை சம்பவம் தமிழ்நாட்டில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரியும், பள்ளி நிர்வாகத்தை கண்டித்தும் பல்வேறு அமைப்புகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டன. 


மாணவி தற்கொலைக்கு பள்ளி ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி என்பவர் அளித்த பாலியல் தொல்லையே காரணம் என மாணவியின் உறவினர்கள் புகார் அளித்ததன் அடிப்படையில்,  கோவை மேற்கு அனைத்து மகளிர் காவல் துறையினர் ஆசிரியர் மிதுன் சக்கரவர்த்தி மீது தற்கொலைக்கு தூண்டுதல், போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.


பாலியல் தொல்லை குறித்து மாணவி புகார் அளித்தும் பள்ளி முதல்வர் மீரா நடவடிக்கை எடுக்காததுதான் மாணவியின் தற்கொலைக்கு காரணமென தெரிவித்து அவரையும் கைது செய்யக்கோரி, பள்ளி மாணவியின் உறவினர்கள் போராடினர். 


இதையடுத்து, அப்பள்ளி முதல்வர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர்,  அவரை தீவிரமாக தேடிவந்தனர். பெங்களூரில் தலைமறைவாக இருந்த மீரா ஜாக்சனை காவல் துறையினர் கைது செய்தனர்.


இந்நிலையில், மாணவி தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக கோவை மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு பள்ளிக்  கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.


அந்த உத்தரவில், கோவையில் பாலியல்  துன்புறுத்தல் காரணமாக மாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தில் தொடர்பாக முதன்மை கல்வி அலுவலர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என குறிப்பிட்டுள்ளது.மே


லும்,இதுபோன்ற சம்பவங்களை தடுப்பது தொடர்பாக 23ஆம் தேதி முதன்மை கல்வி அலுவலர்கள் கூட்டம் நடத்தவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது. பாலியல் துன்புறுத்தல்களை தடுப்பதற்கு ஏற்கனவே வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண  


மேலும் வாசிக்க: கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வர் அதிரடி கைது


கோவை பள்ளி மாணவி தற்கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல்கள்..!


கோவை பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் : பள்ளி முதல்வரை கைது செய்யக்கோரி வலுக்கும் போராட்டம்..!