விருதுநகர், கள்ளக்குறிச்சி, நீலகிரி, ராமநாதபுரம், திருப்பூர் உள்ளிட்ட 11 அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக திறந்து வைத்தார். அதேபோல் சென்னையில் செம்மொழி தமிழ் மத்திய நிறுவனத்தின் புதிய வளாகத்தையும் பிரதமர் மோடி திறந்து காணொலி வாயிலாக வைத்தார்.
இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி, மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மா. சுப்பிரமணியன், எ.வ. வேலு உள்ளிட்ட் அமைச்சர்கள், சுகாதாரத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதனையடுத்து இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “திமுக பொறுப்பேற்ற பிறகு மாண்புமிகு பிரதமர் கலந்து கொள்ளக்கூடிய முதல் அரசு விழா என்பதால் தமிழ்நாடு அரசின் சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
Kamarajar Manimandapam: புதுச்சேரியில் காமராஜர் மணி மண்டபம் - பிரதமர் மோடி திறந்து வைத்தார்!
தமிழ்நாட்டில் அனைத்து மாவட்டங்களிலும் மருத்துவ கல்லூரி அமைய வேண்டும் என்பது கலைஞரின் விருப்பம். தமிழ்நாடு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு நிகழ்ச்சிக்கு நேரம் ஒதுக்கிய பிரதமருக்கு நன்றி.
நன்றி கூறக்கூடிய அதே நேரத்தில் மாநில அரசுகளுக்கு பிரதமரின் அரசு உதவிகளை செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறேன். நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டுக்கு ஒன்றிய அரசு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் வலியுறுத்துகிறேன்.
கிராமப்புற ஏழை, எளிய மாணவர்களுக்கும் மருத்துவக் கல்வி கிடைக்க வேண்டும் என்பதே திமுகவின் கொள்கை. அதனால்தான் விலக்கு கோருகிறோம்” என்றார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: Rajendra Balaji Granted Bail | ராஜேந்திர பாலாஜிக்கு ஜாமின்; உச்சநீதிமன்றம் உத்தரவு.. நிபந்தனைகள் என்னென்ன?