தமிழ்நாட்டில் அடுத்த 2 மணிநேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, இராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும் தேனி, தென்காசி, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் லேசனா மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. 


இனிவரும் நாட்களில் எங்கெல்லாம் மழை..?


குமரிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் வளி மண்டல சுழற்சி நிலவுகிறது.


19.12.2023: தென் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், வட தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிய இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


20.12.2023 முதல் 24.12.2023 வரை தமிழகத்தில் ஓரிய இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை ஓட்டியும் இருக்கக்கூடும்.


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் வருசில பகுதிகளில் லேசான/மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்சியஸை வட்டியும் இருக்கக்கூடும்.


தமிழக கடலோரப்பகுதிகள்:


19.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


20.12.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:


19.12.2023: லட்சதீவு பகுதிகள் மற்றும் அதனை ஓட்டிய தென்கிழக்கு அரபிக்கடல் பதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.


மழை நிலவரம் என்ன..?


தமிழ்நாடு, புதுவை, காரைக்கால் பகுதிகளில் கடந்த அக்டோபர் 1 முதல் இன்று வரையிலான காலகட்டத்தில் மழை அளவு  44 சென்டிமீட்டராக பதிவாகியுள்ளது.  இந்த காலகட்டத்தின் சராசரி அளவு 42 சென்டிமீட்டர் இது ஐந்து சதவீதம் இயல்பை விட அதிகமாகும். வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக முதன் முறையாக வரலாறு காணாத மழை பெய்துள்ளது.


காட்டாற்று வெள்ளம்:


தென்காசி: குற்றாலம் அருவிகளில் காட்டாறு வெள்ளத்தின் ஆக்ரோஷம் தணிந்தது. மலைப்பகுதிகளில் மழை குறைந்ததால் குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு மட்டுமே உள்ளது. தூத்துக்குடியில் பெய்த கனமழை காரணமாக குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்து காணப்படுகிறது. தபால் தந்தி காலனி, கதிர்வேல் நகர், தனசேகர் நகர், ராம் நகர், திரேஸ்புரம், முத்தம்மாள் காலனி, ஸ்டேட் பாங்க் காலனி , அழகேச புரம், லூர்தம்மாள் புரம் பகுதிகளில் தண்ணீர் சூழ்ந்தது.