• TN Rain Alert: மழைக்கு தயாராக இருங்க மக்களே.. அடுத்த 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. மழை நிலவரம் இதோ..


05.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 06.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க 



  • உதயநிதி கூறியதை பாஜக இந்து மதத்திற்கு எதிராக கூறியதாக திரித்து வருகின்றனர் - கே.எஸ் அழகிரி


தமிழக காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ்.அழகிரி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நெல்லை வந்தார். தொடர்ந்து நெல்லை வண்ணார்பேட்டையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், "சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொல்லிய கருத்து பாரதிய ஜனதா கட்சியை அலற விட்டுள்ளது. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோர் சொல்லிய கருத்தைத்தான் உதயநிதி ஸ்டாலினும் கூறியுள்ளார். மேலும் படிக்க 



  • Sasikala Warrant: சசிகலா, இளவரசிக்கு பிடிவாரண்ட்.. பெங்களூரு நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு...


பரப்பன அக்ரஹாரா சிறையில் சொகுசு வசதிகளை பெறுவதற்காக லஞ்சம் கொடுக்கப்பட்டதாக இருந்த புகார் தொடர்பான வழக்கின் விசாரணைக்கு நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்த சசிகலா மற்றும் இளவரசி ஆகியோருக்கு பெங்களூரு நீதிமன்றம் பிடி வாரண்ட் பிறப்பித்துள்ளது. ஜெயலலிதா சொத்து வழக்கில் கைதாகி சிறையில் இருந்த போது, சிறை கண்காணிப்பாளர் கிருஷ்ணகுமார் உட்பட பலருக்கும் லஞ்சம் கொடுத்து வசதிகளை பெற்றதாக அப்போதைய சிறைத்துறை டிஐஜி ரூபா குற்றம் சாட்டி இருந்தார். மேலும் படிக்க 




  • Sanatanam Row: உதயநிதி கருத்துக்கு ஆதரவளிக்கும் திமுக - காங்கிரஸ்: மம்தாவின் பதிலால் I.N.D.I.A கூட்டணியில் சலசலப்பு?




சென்னையில் நடைபெற்ற நிகழ்சி ஒன்றில் பேசிய அமைச்சர் உதயநிதி, “சனாதனம் சமத்துவத்திற்கும், சமூக நீதிக்கும் எதிராக உள்ளது. அது முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும்” என பேசியிருந்தார். இதன் மூலம் இந்து மக்களுக்கு எதிரான இனப்படுகொலைக்கு உதயநிதி அழைப்பு விடுப்பதாக பாஜக குற்றம்சாட்டியது. தொடர்ந்து, பாஜகவை சேர்ந்த பல தலைவர்களும் உதயநிதிக்கு கடும் எதிர்ப்புகளை பதிவு செய்வதோடு, வழக்கும் தொடரப்பட்டுள்ளது. அயோத்தி சாமியார் என்பவர் அமைச்சர் உதயநிதிக்கு கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். மேலும் படிக்க 



  • Dr Radhakrishnan Award: அடேங்கப்பா.. இத்தனை பேருக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது: அமைச்சர் உதயநிதி தலைமையில் வழங்கும் அன்பில்


தமிழ்நாட்டில் பள்ளிக் கல்வித் துறை சார்பில், 386 ஆசிரியர்களுக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது இன்று (செப். 5ஆம் தேதி) வழங்கப்படுகிறது. அமைச்சர் உதயநிதி தலைமையில் நடைபெற உள்ள விழாவில் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விருதுகளை வழங்குகிறார். முன்னாள் குடியரசுத் தலைவரும் சிறந்த ஆசிரியருமான டாக்டர். ராதா கிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் தேதி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் விருதுகள் வழங்கப்படும். மேலும் படிக்க