வேகமாக வளரும் துறை

 

இன்றைய காலகட்டத்தில் மிக வேகமாக வளர்ந்து வரும் துறையாக ஆளில்லா ட்ரோன் துறை வளர்ந்து வருகிறது. ட்ரோன்கள் தற்பொழுது, பல்வேறு துறைகளில் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக அனுபவம் வாய்ந்த ட்ரோன்களை, இயக்குபவர்களுக்கு தேவையையும் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில், ட்ரோன்களை பேசும் திறன் மற்றும் கேட்கும் திறன் குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகளும், ட்ரோன்களை இயக்க கருடா ஏரோஸ்பேஸ் சார்பில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

 


வாய் பேசமுடியாத, காதுகேட்பு திறன் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு டிரோன் பயிற்சி


 

மாற்றுத்திறனாளிகளுக்கு பயிற்சி

 

சென்னை அடுத்த தாழம்பூரில் கருடா ஏரோஸ்பேஸ் சார்பில் மாற்று திறனாளிகள் வாழ்கையை மேம்படுத்தும் விதமாக ட்ரோன் பயிற்சி அளித்து வருகிறது. தென்னிந்தியாவில் பல்வேறு பகுதிகளில் இருந்து, தேர்வான வாய் பேசமுடியாத, காதுகேட்பு திறன் இல்லாத 10 மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு கடந்த பத்து நாட்களாக உணவு, தங்குமிடத்துடன் பயிற்சி அளிக்கப்பட்டது.

 


வாய் பேசமுடியாத, காதுகேட்பு திறன் குறைவான மாற்றுத்திறனாளிகளுக்கு டிரோன் பயிற்சி


 

மாற்றுதிறனாளிகளும் ட்ரோன் பயிற்சி மேற்கொள்வதன் மூலம் அவர்கள் ட்ரோன் பராமரிப்பு, செயல்பாடு, விவசாயம், இ-காமர்ஸ், டெலிவரி, கண்காணிப்பு, மேப்பிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் வேலைவாய்ப்பு பெறவும் மற்ற படித்த இளைஞர்களுக்கு இணையான ஊதியம் பெற்று தன் நம்பிக்கையுடன் வாழமுடியும் என தெரிவிக்கும் அவர்கள் 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் 10 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு டிரோன் பயிற்சி அளிக்கப்படும் என தெரிவித்தனர்.  இதுபோன்ற பயிற்சிகளில் அவர்களுக்கு எளிதில் புரியும் விதத்தில் சைகை மொழியில் எடுத்துரைப்பதாகவும் அப்போது எளிதில் புரிந்துகொள்வதாக பயிற்சி அளிப்பவர்கள் பெருமிதத்துடன் தெரிவித்தனர்.