திருவண்ணாமலையில் அரசுப் பள்ளி மாணவி மயங்கி விழுந்து உயிரிழப்பு - நடந்தது என்ன..?

மங்கலம் அரசு பள்ளியில் 10-ம் வகுப்பு மாணவி மயங்கி விழுந்து இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

திருவண்ணாமலை ( Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டம் உள்ள ராந்தம் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி. இவரது மகள் அஞ்சலை வயது (15). இவர் மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் 10-ம் வகுப்பு பயின்று வந்தார். இந்த நிலையில் நேற்று மாலை பள்ளியில் மிட்டம் டெஸ்ட் நடந்துள்ளது அதனை மாணவி அஞ்சலை எழுதிக்கொஒண்டு இருந்துள்ளார். அப்போது மாணவி அஞ்சலி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளதாக கூறப்படுகிறது. இதை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் அவரை மீட்டு உடனடியாக மங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். பின்னர் மருத்துவர்கள் அங்கிருந்து 108 ஆம்புலன்சு மூலமாக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.

Continues below advertisement


மாணவி உயிரிழப்பு 

அங்கு அஞ்சலையை பரிசோதனை செய்த மருத்துவர்கள் மாணவி அஞ்சலி வரும் வழியிலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனைத்தொடர்ந்து இது குறித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் அஞ்சலை இருதய பிரச்சினைக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக தெரியவந்துள்ளது. தொடர்ந்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மாணவியின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட உள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

 


 

இந்த சம்பவம் குறித்து மாணவியின் அண்ணன் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியதாவது;

மங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் என்னுடைய தங்கை அஞ்சலி பத்தாம் வகுப்பு பயின்று வருகிறார். இந்த பள்ளியில் நேற்று மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடைபெற்றது. இதற்காக பள்ளி மாணவர்களை பள்ளியின் மைதானத்தில் வெயிலில் அமரவைத்துள்ளனர். அதில் என்னுடைய தங்கை அஞ்சலியும் இருந்துள்ளார். சைக்கிள்கள் வழங்கும் விழாவிற்கு துணை சபாநாயகர் பிச்சாண்டி வருவதற்கு தாமதம் ஆனதால் வெயிலின் தாக்கத்தால் என்னுடைய தங்கை அங்கேயே மயங்கி விழுந்து இறந்துள்ளார். இது குறித்து எங்களுக்கு யாரும் தெரிவிக்க வில்லை, தங்கையின் உடல் திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் உள்ளது‌. இந்த சம்பவம் குறித்து போலீசாரிடம் கேட்டால் முறையான காரணம் சொல்ல மறுக்கின்றனர். போலீசார் எங்களுக்கு ஒத்துழைப்பு செய்ய மாட்டுகிறார்கள். என்னுடைய தங்கை உடலை மட்டும் போலீசார் வாங்கி கொண்டு செல்லுங்கள் என்றுதான் கூறுகின்றனர் ஆனால் எந்த ஒரு உதவி செய்ய மறுக்கின்றனர். இதற்கு முறையான நீதி வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் கார்த்திகேயனுக்கு தொலைபேசியில் அழைத்தோம், ஆனால் அழைப்பை எடுக்கவில்லை. மேலும் இந்த சம்பவம் குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலருக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டோம். ஆனால் அவரும் தொடர்பை எடுக்கவில்லை.

Continues below advertisement