• CM Stalin: சிங்கப்பூர் அதிரபரான தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!


சிங்கப்பூர் அதிரபராக பொறுப்பேற்க உள்ள தமிழர் தர்மன் சண்முகரத்னத்துக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், “சிங்கப்பூர் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள தர்மன் சண்முகரத்னத்துக்கு வாழ்த்துகள். உங்களின் வெற்றி சிங்கப்பூர் மக்களின் பண்முகத்தன்மையை பிரதிபலிக்கிறது. உங்களின் தமிழ் பாரம்பரியம் மற்றும் ஈர்க்கக்கூடிய தகுதிகள் எங்களை பெருமைப்படுத்துகிறது” என முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அதோடு ”யாதும் ஊரே யாவரும் கேளிர்” என்ற புறநானூறு பாடலின் வரிகளையும் பதிவிட்டுள்ளார். மேலும் படிக்க 



  • TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 14 மாவட்டங்களில் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய மழை நிலவரம்..


02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க 



  • கச்சத்தீவு விவகாரத்தை மத்திய அரசு கலந்தாலோசித்து உரிய நடவடிக்கை எடுக்கும் -அமைச்சர் எல்.முருகன்


இந்திய கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை கேட்டறிந்து அவைகளை தீர்க்கும் வகையிலும், கடல் உணவு ஏற்றுமதிக்கான வாய்ப்புகளை மேம்படுத்தவும் ‘சாகர் பரிக்ரமா’ என்ற கடலோர யாத்திரை மத்திய அரசு சார்பில் நடைபெற்று வருகிறது. குஜராத்தில் தொடங்கிய யாத்திரை தூத்துக்குடி மாவட்டத்தை வந்தடைந்தது. இந்த யாத்திரை குழுவில் மத்திய மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீபர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர். மேலும் படிக்க 



  • செப்.15 காஞ்சிபுரத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் முதலமைச்சர்..! வெளியானது அதிரடி அறிவிப்பு..!



குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை காஞ்சிபுரத்தில் செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாள் அன்று துவக்க உள்ளதால் இடத்தை அமைச்சர் தா.மோ அன்பரசு ஆய்வு மேற்கொண்டார்

குடும்பத் தலைவிகளுக்கு செப்டம்பர் 15-ந் தேதியில் இருந்து மாதம் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. பேரறிஞர் அண்ணா பிறந்த நாளான செப்டம்பர் 15-ந் தேதி அவர் பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் இதற்கான தொடக்க விழா பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கு சென்று குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கிறார். மேலும் படிக்க 

 



  • தயாராகும் காஞ்சிபுரம்..! ஓபிஎஸ் எடுக்க போகும் ஒற்றை முடிவு என்ன..! காத்துக்கிடக்கும் ஆதரவாளர்கள்.!


அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் முன்னாள் முதலமைச்சருமான, ஜெயலலிதா மறைவை தொடர்ந்து அதிமுகவில் பல அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்தன. ஜெயலலிதா மறைவிற்குப் பிறகு முதலமைச்சர்  பதவியை ஏற்றார் ஓபிஎஸ். அதன் பிறகு முதலமைச்சராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா பதவியை ஏற்க இருந்தார். இந்தநிலையில் சொத்து குவிப்பு வழக்கில், அவர் தண்டனை பெறவே, எடப்பாடி பழனிசாமி முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் படிக்க