வட தமிழகம் மற்றும் குமரிக்கடல் பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல சுழற்சிகள்  காரணமாக, இன்று 14 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.  


02.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டத்தின் மலை பகுதிகள், தென்காசி, தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


03.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 


04.09.2023 முதல் 08.09.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26-27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில்  இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36-37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


 நாலுமுக்கு (திருநெல்வேலி) 16, வைகை அணை (தேனி), காக்காச்சி (திருநெல்வேலி) தலா 15, நிலக்கோட்டை (திண்டுக்கல்) 11, ஆண்டிபட்டி (தேனி) 10, மாஞ்சோலை (திருநெல்வேலி), மஞ்சளாறு (தேனி) தலா 9, பெரியகுளம் (தேனி), பாலமோர் (கன்னியாகுமரி) தலா 8, பென்னாகரம் (தர்மபுரி), கொடுமுடி (ஈரோடு), ஒகேனக்கல் (தர்மபுரி) தலா 7, ராமநாதபுரம், ஊத்து (திருநெல்வேலி), சோத்துப்பாறை (தேனி), மேட்டூர் (சேலம்), ஓட்டன்சத்திரம் (திண்டுக்கல்) 6, பெரியகுளம் AWS (தேனி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), பாபநாசம் (திருநெல்வேலி), பெனுகொண்டாபுரம் (கிருஷ்ணகிரி), கரூர்பரமத்தி (கரூர்), சின்கோனா (கோயம்புத்தூர்), ஊத்துக்குளி (திருப்பூர்), கொடைக்கானல் படகு குழாம் ( திண்டுக்கல்) தலா 5 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகள்: 


02.09.2023 முதல் 06.09.2023 வரை: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


02.09.2023 மற்றும் 03.09.2023: தெற்கு வங்கக் கடலின் மத்திய பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


04.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் தெற்கு  வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


05.09.2023: தெற்கு கேரளா கடலோரப் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


05.09.2023 மற்றும் 06.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு  வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்திய வங்க கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.