- CM MK Stalin: நபிகள் நாயகரின் போதனைகள், அறிவுரைகள் பொன்னை போல் பாதுகாக்க வேண்டும் - முதலமைச்சர் ஸ்டாலின்..
அண்ணல் நபிகள் நாயகளாரின் போதனைகள், அறிவுரைகள், வழிக்காட்டுதல்களை பொன்னை போல் போற்றிப் பாதுகாக்க வேண்டும் என் முதலமைச்சர் ஸ்டாலின் நபிகள் நாயகம் பிறந்தநாள் வாழ்த்து அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான அறிக்கையில், “மகிழ்ச்சி நிறைந்த உள்ளத்தோடு அண்ணல் நபிகள் நாயகம் பிறந்தநாளை எழுச்சியோடு கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு "மீலாதுன் நபி" நன்னாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். "நம்பிக்கைக்குரியவர்" "அடைக்கலம் அளிப்பவர்". "வாய்மையாளர்" எனப் பொருள்படும். "அல் அமீன்" எனும் சிறப்புப் பெயர்கொண்டு அவர்மீது அன்பு கொண்ட பொதுமக்களால் அழைக்கப்பட்ட நபிகள் பெருமானார். மேலும் படிக்க
- Govt Jobs: 2 ஆண்டுகளில் 50 ஆயிரம் பேருக்கு அரசுப்பணி; டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டுக்கு புது தொழில்நுட்பம்- முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
அடுத்த 2 ஆண்டுகளில் டிஎன்பிஎஸ்சி மூலம் சுமார் 50 ஆயிரம் அரசுப் பணி இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும் டிஎன்பிஎஸ்சி விடைத்தாள் மதிப்பீட்டுக்கு புது தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாகவும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 2022 ஜூன் மாதம் நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் வெற்ற 10,205 பேர் அரசின் பல்வேறு துறைகளில் இளநிலைப் பணியாளர்களாகப் பணியில் சேர உள்ளனர். சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்ற விழாவில், தேர்வில் வெற்றி பெற்றோருக்குப் பணி ஆணைகள் வழங்கி, முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசினார். மேலும் படிக்க
- TN Rain Alert: தமிழ்நாட்டில் இன்று 3 மாவட்டங்களில் கனமழை: எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. 28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க
- Thirumavalavan Hospitalized: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் திருமாவளவனிடம் எடப்பாடி பழனிசாமி நலம் விசாரிப்பு!
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் நாடாளுமன்ற எம்.பியுமான திருமாவளவன் நேற்று காய்ச்சல் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட அவருக்கு பரிசோதனை செய்ததில் சாதாரண காய்ச்சல் என மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரு உடல்நலத்துடன் இருப்பதாகவும் விரைவில் வீடு திரும்புவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரும் 30 ஆம் தேதிவரை கட்சி தொண்டர்கள் அரசியல் தலைவர்கள் அவரை நேரில் சந்திக்க வரவேண்டாம் என விசிக சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- Minister Jayakumar: “தெளிவான நிலைப்பாடு; கருத்து கூற விரும்பவில்லை” - கூட்டணி முறிவு குறித்து ஜெயகுமார்
தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், "சி பி ஆதித்தனார் ஒரு பன்முக தன்மை வாய்ந்தவர் , பொதுவாகவே ஒரு நல்ல ஆசிரியராக மற்றும் சட்டமன்ற பேரவையின் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து அவரது கடமையை சிறப்பாக ஆற்றியது என்பது உலகம் அறிந்த உண்மை. மேலும் படிக்க