தமிழக கடலோரப்பகுதிகளை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று 3 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 


27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். திருவள்ளூர், இராணிப்பேட்டை மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


28.09.2023 மற்றும் 29.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின்  மலை பகுதிகள்,  நீலகிரி,  தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.


30.09.2023 முதல் 03.10.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35-36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 25-26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 


கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


பூண்டி (திருவள்ளூர்) 10, தாமரைப்பாக்கம் (திருவள்ளூர்) 9, வாலாஜா (ராணிப்பேட்டை) 8,  ஆற்காடு (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை, திருவள்ளூர், ஊத்துக்கோட்டை (திருவள்ளூர்) தலா  5,  அம்பத்தூர் (சென்னை), செய்யார் (திருவண்ணாமலை) தலா  4, ஸ்ரீபெரும்புதூர் (காஞ்சிபுரம்), கல்லந்திரி (மதுரை), பாலாறு அணைக்கட்டு (ராணிப்பேட்டை), தேவாலா (நீலகிரி), தாலுகா அலுவலகம் பந்தலூர் (நீலகிரி), பொன்னேரி (திருவள்ளூர்), ஆரணி (திருவண்ணாமலை), பொன்னை அணை (வேலூர்) தலா  3,  தொழுதூர் (கடலூர்), பவானிசாகர் (ஈரோடு), குன்றத்தூர் (காஞ்சிபுரம்), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), சூலகிரி (கிருஷ்ணகிரி), மேட்டுப்பட்டி (மதுரை), பெரியபட்டி (மதுரை), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை), சொளிங்கர் (ராணிப்பேட்டை), ஓமலூர் (சேலம்), கூடலூர் பஜார் (நீலகிரி), மேல் கூடலூர் (நீலகிரி), ஆவடி (திருவள்ளூர்), சோழவரம் (திருவள்ளூர்), கொரட்டூர் (திருவள்ளூர்), பள்ளிப்பட்டு (திருவள்ளூர்), திருத்தணி (திருவள்ளூர்), காட்பாடி (வேலூர்),  மாதவரம் AWS (சென்னை), மேற்கு தாம்பரம் ARG (செங்கல்பட்டு), KVK கட்டப்பாக்கம் ARG (காஞ்சிபுரம்), விரிஞ்சிபுரம் KVK (வேலூர்) தலா  2 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 


மீனவர்களுக்கான எச்சரிக்கை:  


தமிழக கடலோரப்பகுதிகள்: 
29.09.2023 மற்றும் 30.09.2023: தென்தமிழக கடலோரப்பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


வங்கக்கடல் பகுதிகள்:


27.09.2023:தெற்கு வங்கக்கடல் பகுதிகள் மற்றும்  அதனை ஒட்டிய மத்திய வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


28.09.2023: இலங்கை கடலோரப்பகுதிகள்,  தெற்கு வங்கக்கடல் பகுதிகள்,  மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மத்தியமேற்கு வங்கக்கடல்  பகுதிகளில் சூறாவளிக் காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


29.09.2023 முதல் 01.10.2023 வரை: இலங்கை கடலோரப்பகுதிகள், தெற்கு வங்கக்கடல் பகுதிகள், மத்திய வங்கக்கடல் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.


அரபிக்கடல் பகுதிகள்:  
29.09.2023 மற்றும் 30.09.2023: கேரள கடலோரப்பகுதிகள் மற்றும் லட்சதீவு பகுதிகளில் சூறாவளிக்காற்று  மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.
மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.