நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி முடிவு எடுப்பார் என அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்துள்ளார். 


தமிழர் தந்தை சி பா ஆதித்தனாரின் 119 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை எழும்பூரில் உள்ள அவரின் உருவ சிலைக்கு மாலை அணிவித்த பின் சிலைக்கு கீழ் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள உருவப்படத்திற்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார்.  


அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர், "சி பி ஆதித்தனார் ஒரு பன்முக தன்மை வாய்ந்தவர் , பொதுவாகவே ஒரு நல்ல ஆசிரியராக மற்றும் சட்டமன்ற பேரவையின் தலைவராகவும் அமைச்சராகவும் இருந்து அவரது கடமையை சிறப்பாக ஆற்றியது என்பது உலகம் அறிந்த உண்மை. அவரது புகழ் என்பது தமிழ் கூறும் மக்கள் அனைவராலும் போற்றப்படுவது உண்மையான காரணத்தினால் புரட்சித்தலைவர் எம்.ஜிஆர் அவருக்கு இந்த இடத்தில் அவர் மீது கொண்ட மரியாதையினால் சிலை ஏற்றி வைத்து எம்.ஜி.ஆர் அவர்களே திறந்து வைத்தார்,


அதனை தொடர்ந்து எடப்பாடியார் முதல்வராக இருந்த போது ஆதித்தனார் பிறந்த நாளை அரசு விழாவாக அறிவித்தார். தமிழர் தந்தையின் பெருமை உலகறிய செய்தார். அதிமுக பாஜக கூட்டணி முறிவு குறித்து புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் ஒரு மனதாக முடிவு எடுக்கப்பட்டது. மேற்கொண்டு கருத்து சொல்ல விரும்பவில்லை. யாருக்கு ஆதரவு அளிப்பது என்பதில் எந்த குழப்பமும் இல்லை. தெளிவான நிலைப்பாட்டை எடுத்து விட்டோம். நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் போது கூட்டணி குறித்து பொதுச் செயலாளர் முடிவு எடுப்பார்” என தெரிவித்தார்.


கூட்டணியில் இருந்து வெளியேறிய பிறகு  அண்ணாமலைக்கு நெருக்கடி ஏற்பட்டு விட்டதா எனக் கேட்கப்பட்ட கேள்விக்கு , அது குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை என்றார்.


NIA Raid: நாடு முழுவதும் களமிறங்கிய என்.ஐ.ஏ அதிகாரிகள்.. 6 மாநிலங்களில் 51 இடத்தில் அதிரடி ரெய்டு


Dalai Lama: ”சீனாவிடமிருந்து சுதந்திரம் வேண்டாம்; ஆனால்...” - திபெத் விவகாரத்தில் தலாய் லாமா கறார்!


10 years of Raja Rani: மௌன ராகம் கதையில் மேஜிக் காட்டிய அட்லீ.. 10 ஆண்டுகளை கடந்த “ராஜா ராணி”..!