சென்னையில் தீம் பார்க்
சென்னை புறநகரில் 100 ஏக்கர் பரப்பளவில் தீம் பார்க் அமைக்கப்படும் என தமிழ்நாடு சுற்றுலாத்துறை தெரிவித்துள்ளது. 5 ஆண்டுகளில் இந்த தீம் பார்க் தனியார் உதவியுடன் கட்டமைக்கப்படும் எனவும் சுற்றுலாத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வாசிக்க..
சென்னை வரும் சோனியா, பிரியங்கா காந்தி..!
சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் அக்டோபர் 14ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் மகளிர் உரிமை மாநாடு நடைபெறுகிறது. இதில், இந்தியா கூட்டணி கட்சிகளின் பெண் தலைவர்கள் மகளிர் உரிமை மாநாட்டில் பங்கேற்று உரையாற்ற உள்ளனர். அதன்படி, சோனியா காந்தி, பிரியங்கா காந்தி, மெகபூபா முஃப்தி, சுப்ரியா சுலே, சுபாஷினி அலி உள்ளிட்டோர் உரையாற்ற உள்ளனர். மேலும் வாசிக்க..
தமிழ்நாட்டில் டெங்கு பாதிப்பு மிகவும் குறைவு
தமிழகத்தைப் பொறுத்தவரை டெங்கு பாதிப்பு மிகவும் குறைவாக உள்ளது எனவும் டெங்கு என்பது பருவமழை காலங்களில் வரக்கூடிய ஒரு நோய் தான் அக்டோபர் 1ம் தேதி ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும். விபத்தில் மூளைச்சாவடைந்து உடல் உறுப்பு தானம் செய்த சின்னமனூர் வருவாய் அலுவலர் உடலுக்கு அரசு மரியாதை செய்வதற்காக மதுரை விமான நிலையம் வந்த அமைச்சர் மா சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். -மேலும் வாசிக்க..
தேனி நபருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு!
இந்நிலையில் தேனி மாவட்டம் சின்னமனூரில் உடல் உறுப்பு தானம் செய்த அரசு ஊழியர் வடிவேலுவிற்கு (37) இன்று அரசு மரியாதையுடன் இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது. இந்த இறுதிச் சடங்கில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பங்கேற்க உள்ளார். கடந்த 23-ஆம் தேதி ஏற்பட்ட சாலை விபத்தில் வடிவேலு மூளைச்சாவு அடைந்தார். இதனால் அவரின் உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டது.மருத்துவத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இது குறித்து சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: “உடல் உறுப்பு தானம் செய்த நபருக்கு அரசு மரியாதை செலுத்த தேனி செல்கிறோம். இன்று முதல் இந்த அறிவிப்பு நடைமுறைக்கு வருகிறது என்றார். மேலும் வாசிக்க..
காவல்துறை ஆணையக்கூட்டத்தில் முக்கிய முடிவு
தென் மண்டல அளவிலான காவல்துறையினருக்கான ஆணையக் கூட்டம் காவல் ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென் மண்டலத்தில் காவல்துறையினருக்கான குறைகளை நிவர்த்தி செய்தல், காவல்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது , மாவட்ட நிர்வாகம் - காவல்துறையினர் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.மேலும் வாசிக்க..
டிடிஎஃப் வாசனுக்கு மீண்டும் செக்..
இருசக்கர வாகனத்தில் தொலைதூரப் பயணம் மேற்கொள்வது, உயர்ரக பைக்குகளில் சாகசங்கள் மேற்கொள்வது உள்ளிட்ட வீடியோக்களை யூடியூபில் பதிவு செய்து வருவது டிடிஎஃப் வாசனின் வாடிக்கையாக உள்ளது. இந்தநிலையில், டிடிஎஃப் வாசன் கடந்த 17ஆம் தேதி சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் அடுத்த தாமல் பகுதியில் உயர்ரக பைக்கில் சென்று சாகசம் செய்ய முயன்று விபத்து ஏற்பட்டு காயமடைந்தார். கை முறிவு காயம் அடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று விட்டு சென்ற நிலையில் பாலுசெட்டி சத்திரம் போலீசார் 5 பிரிவுகளின் கீழ் டிடிஎஃப் வாசன் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் வாசிக்க..
வானிலை அறிவிப்பு
தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு சிவகங்கை, ராமநாதபுரம், தேனி மற்றும் தென்காசி ஆகிய மாவட்டங்களில் மிதமான இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. சேலம், பெரம்பலூர், கள்ளக்குறிச்சி, கடலூர், விழுப்புரம், நீலகிரி, சோயம்பத்தூர், திருப்பத்தூர், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி, மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசான இடி மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் வாசிக்க..