” தென் மாவட்ட அளவில் காவல்துறையின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்கான  - ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையிலான 5- வது காவல் ஆணையக் கூட்டம்  ” நடைபெற்றது.


தென் மண்டல அளவிலான காவல்துறையினருக்கான ஆணையக் கூட்டம்  காவல் ஆணைய தலைவரான ஓய்வு பெற்ற நீதிபதி சி.டி. செல்வம் தலைமையில் மதுரை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் தென் மண்டலத்தில் காவல்துறையினருக்கான குறைகளை நிவர்த்தி செய்தல், காவல்துறை செயல்பாடுகளை மேம்படுத்துவது , மாவட்ட நிர்வாகம் - காவல்துறையினர் இணைந்து செயல்படுவது தொடர்பான ஆலோசனைகள் கலந்து ஆலோசிக்கப்பட்டது.

 




 

 





இதில் ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி அலாவுதீன் , ஐ.பி.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் , நளினி ராவ், உள்ளிட்டோர் பங்கேற்பு. இந்த கூட்டத்தில் மதுரை தேனி,  திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை , விருதுநகர், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி , கன்னியாகுமரி உள்ளிட்ட 10 மாவட்டத்தைச் சேர்ந்த மாவட்ட ஆட்சியர்கள் மற்றும்  தென் மண்டல ஐ.ஜி., நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள், துணை ஆணையர்கள் பங்கேற்றனர். இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 



 

இதனிடையே ” மதுரை தேனி,  திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் கஞ்சா பயன்பாடு அதிகரித்து வருகிறது. இதனை முற்றிலுமாக கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கடந்த சில மாதங்களாக கஞ்சா குற்றம் தொடர்புடைய நபர்கள் மீது அவர்களின் உறவினர்கள் மீதும் நடவடிக்கைகள் எடுக்கும்படியாக அவர்கள் சொத்துக்கள் மற்றும் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுகிறது. இது போன்று செயல்பாடுகள் வரவேற்கத்தக்கது. தொடர்ந்து இது போல் குற்றவாளிகளை முடக்கும் போது கஞ்சா பயன்பாடு குறையவரும். அதே போல் பழிக்குப் பழி கொலை தொடர்பான அவர்களை கண்காணித்து அவர்களை கைது செய்ய வேண்டும். அப்போது கொலை குற்றங்களையும் குறைக்க முடியும் ” எனவும் தெரிவித்தனர்.