• Annamalai: அண்ணா பற்றிய கருத்து சரி; மன்னிப்பு கேட்க முடியாது.. அண்ணாமலை ஆவேசம்..!


கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்து வருகிறார். அப்போது பேசிய அவர், “எனக்கு யாரிடமும் பிரச்சனை இல்லை. அதிமுக தலைவர்கள் கேட்கும் கேள்விக்கு நான் எப்படி பதில் சொல்ல முடியாது. கூட்டணியில் உள்ள கட்சிகள் வேறு வேறு சித்தாந்தம் கொண்ட கட்சிகள். தமிழகத்தில் மது ஒழிப்பதற்கு இலக்கணம் அண்ணா, குடும்ப அரசியலை எதிர்த்தவர் அண்ணா. அண்ணாவை தரக்குறைவாக விமர்சிக்கவில்லை. எந்த கட்சிக்கும் இந்த கட்சி போட்டியில்லை. பாஜக ஆட்சிக்கு வர வேண்டும் என்பதே இலக்கு. என் கட்சியை நான் வளர்க்கிறேன். திமுக விஷம், திமுகவை அடியோடு வெறுக்கிறேன், நான் ஆக்ரோஷமான அரசியல் செய்கிறேன். மேலும் படிக்க 



  • EPS Vs Udhayanidhi Stalin: இபிஎஸ்சை இழுக்காதீங்க! உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்த உயர்நீதிமன்றம்..


கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை தொடர்புபடுத்தி கருத்துக்களை தெரிவிக்க, அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், செப்டம்பர் 7ஆம் தேதி வெளியிட்டிருந்த அறிக்கையில், சானாதனத்திற்கான அர்த்தத்தை அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தன் வீட்டில் உள்ள புத்தக அலமாரியில் இருக்கும் தேடிக்கொண்டிருப்பதாக தெரிவித்திருந்தார். மேலும் படிக்க 



எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ் உள்ளிட்ட மருத்துவப் படிப்புகளில் சேர்வதற்கு நீட் தகுதித் தேர்வை தேசிய தேர்வு முகமை ஒவ்வொரு ஆண்டும் நடத்தி வருகிறது. 12ஆம் வகுப்பு முடித்த மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு நீட் இளநிலை தேர்வில் (Neet UG) தேர்ச்சி பெற வேண்டும். அதேபோல, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ முதுநிலை படிப்பில் சேர, மருத்துவ மாணவர்கள் நீட் முதுநிலை தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். அதன்படி, எம்.டி, எம்.எஸ் உள்ளிட்ட மருத்துவ மேற்படிப்புகளுக்கான 2023-24 தேர்வு கடந்த மார்ச் 5ஆம் தேதி நடைபெற்றது. மேலும் படிக்க



  • AIADMK Case: மீண்டும் மீண்டும் ஓபிஎஸ்க்கு செக்...! இபிஎஸ் தொடர்ந்த வழக்கில் நீதிமன்றம் அளித்த உத்தரவு


அஇஅதிமுக கட்சியின் பெயர், அண்ணாவின் படம் பொறித்த கொடி, இரட்டை இலை சின்னம் ஆகியவற்றை பயன்படுத்துவதற்கு, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஓ.பன்னீர்செல்வத்திற்கு தடை விதிக்க கோரி, அக்கட்சியின் பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை இன்று நடைபெற்றது. இன்றைய விசாரணையில் ஓபிஎஸ் தரப்பு பதிலளிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். மேலும் படிக்க 



  • TN Rain Alert: சில்லென மாறும் தமிழ்நாடு.. இன்றும் நாளையும் கொட்டப்போகும் மழை.. இன்றைய மழை நிலவரம் இதோ..


குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க