குமரிக்கடல் பகுதிகளில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் மேற்குதிசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

 

21.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, மதுரை, சேலம், நாமக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் திருப்பத்தூர், மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

22.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில்  இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள, நீலகிரி, ஈரோடு, தேனி, திண்டுக்கல், திருச்சிராப்பள்ளி,  சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மற்றும்  கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

 

23.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

24.09.2023 மற்றும் 25.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில  இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

26.09.2023 மற்றும் 27.09.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில்  லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.

 

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான   வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

 

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான/மிதமான மழை  பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும். 

கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):


 

திருப்பத்தூர் PTO 10, ஆற்காடு (ராணிப்பேட்டை), போளூர் (திருவண்ணாமலை) தலா 9, செய்யார் (திருவண்ணாமலை) 8, ராணிப்பேட்டை, ஆரணி (திருவண்ணாமலை) தலா 7, வத்திராயிருப்பு (விருதுநகர்) 6, கோபிசெட்டிபாளையம் (ஈரோடு), கலவை பொதுப்பணித்துறை (ராணிப்பேட்டை) தலா 5,  மகாபலிபுரம் (செங்கல்பட்டு), கொடைக்கானல் படகு குழாம் (திண்டுக்கல்), குண்டேரிப்பள்ளம் (ஈரோடு), வரட்டுப்பள்ளம் (ஈரோடு), உத்திரமேரூர் (காஞ்சிபுரம்), அம்மூர் (வாலாஜா இரயில்வே) (ராணிப்பேட்டை), காவேரிப்பாக்கம் (ராணிப்பேட்டை), வாலாஜா (ராணிப்பேட்டை), மேட்டூர் (சேலம்), கடம்பூர் (தூத்துக்குடி) தலா 4,  மதுராந்தகம் (செங்கல்பட்டு), ஒகேனக்கல் (தர்மபுரி), சங்கராபுரம் (கள்ளக்குறிச்சி), பாலமோர் (கன்னியாகுமரி), பஞ்சப்பட்டி (கரூர்), வேப்பந்தட்டை (பெரம்பலூர்), எடப்பாடி (சேலம்), இளையங்குடி (சிவகங்கை), TCS மில் கேதாண்டபட்டி (திருப்பத்தூர்), சத்தியபாமா பல்கலைக்கழகம் ARG (செங்கல்பட்டு)தலா 3 செ.மீ மழை பதிவாகியுள்ளது. 

 

மேலும் மீனவர்களுக்கான எச்சரிக்கை எதுவும் இல்லை என்றும் வானிலை ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது.