தியாகி இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம்


இம்மானுவேல் சேகரனுக்கு மணிமண்டபம் அமைக்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.இந்நிலையில் பொதுமக்களின் நீண்ட நாள் கோரிக்கையினை நிறைவேற்றிடும் வகையில், தியாகி இம்மானுவேல் சேகரனர் அவர்களின் சமூக பங்களிப்பினைப் போற்றும் வகையில் அவரது பிறந்தநாள் நூற்றாண்டினையொட்டி அன்னார் நல்லடக்கம் செய்யப்பட்ட இராமநாதபுரம் மாவட்டம். பரமக்குடி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் சுமார் ரூபாய் 3 கோடி மதிப்பீட்டில் இம்மானுவேல் சேகரனார் அவர்களுக்கு திருவுருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் தமிழ்நாடு அரசின் சார்பில் கட்டப்படும்...மேலும் வாசிக்க..


234 தொகுதிகளிலும் மருத்துவ காப்பீடு திட்டம்


எம்.ஜி.ஆர் மருத்துவக் கல்லூரியில் ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம் அமைய உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ஏற்கனவே கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு  ஒன்றியத்திற்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும 1,260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது” என்றார் அமைச்சர் மா.சுப்பிரமணியன். மேலும் வாசிக்க..


டெங்கு காய்ச்சல்.. சுகாதாரத்துறையின் முக்கிய அறிவுறுத்தல்கள் என்னென்ன?


சென்னை அருகே டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் உயிரிழந்துள்ள நிலையில், சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என பொது சுகாதாரத்துறை கேட்டுக் கொண்டுள்ளது. சென்னை அருகே மதுரவாயலில் டெங்கு காய்ச்சலுக்கு 4 வயது சிறுவன் ரக்‌ஷன் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில், காய்ச்சல் தடுப்பு நடவடிக்கையில் தமிழ்நாடு அரசின் சுகாதாரத்துறை தீவிரம் காட்டி வருகிறது. ”தேங்கி நிற்கும் நீரின் மூலமே கொசு உற்பத்தி அதிகமாகி, டெங்கு, மலேரியா போன்ற காய்ச்சல்கள் பரவுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, நமது சுற்றுப்புறத்தை தூய்மையாக வைத்துக்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர், காய்ச்சல் வந்துவிட்டால், மருத்துவர்களின் பரிந்துரை இல்லாமல் மருந்துகளை எடுத்துக்கொள்ளக்கூடாது” எனவும் அறிவுறுத்தியுள்ளார்.மேலும் வாசிக்க.


சனாதன தர்ம விவகாரம்:  அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்


சனாதன மாநாட்டில் பங்கேற்ற பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ”தமிழ்நாட்டில் டெங்கு, மலேரியா, கொரோனா போன்றது சனாதன தர்மம். சனாதன தர்மத்தை எதிர்க்கக்கூடாது, ஒழித்துக்கட்டவேண்டும். ஒழித்துக்கட்டுவோம்” என தெரிவித்தார். இந்த நிலையில், சனாதனத்தை ஒழிப்போம் என்று சொல்லாமல் சொல்லும் விதமாக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கொசுக்களை அழிக்கும் கொசுவர்த்தி ஏற்றி வைக்கப்பட்டது போன்ற புகைப்படத்தை மட்டும் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் தற்போது அதிக அளவில் ரீ-ட்வீட் செய்யப்பட்டு வருகிறது. மேலும் வாசிக்க..


4 நாட்களில் அமலாக்கத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு


அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனு மீது பதிலளிக்க, அமலாக்கத்துறை கால அவகாசம் கோரியது.தனை விசாரித்த நீதிமன்றம் ”அமைச்சரின் வழக்கை எம்.பி, எம்.எல்.ஏ வழக்குகளுக்கான நீதிமன்றத்திற்கு மாற்றியது தவறு எனவும், சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் எம்.பி., எம்.எல்.ஏக்களாக இருந்தாலும், அந்த வழக்குகளை விசாரிக்க முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு மட்டுமே அதிகார வரம்பு வழங்கப்பட்டுள்ளதாக” உத்தரவிட்டது. மேலும் வாசிக்க..