அமைச்சராக நீடிப்பாரா செந்தில் பாலாஜி?
சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி, எந்த தகுதியின் அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக நீடிக்கிறார் என விளக்கம் கேட்க உத்தரவிடக் கோரி ராமச்சந்திரன், அதிமுக முன்னாள் எம்.பி. ஜெயவர்த்தன் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.மேலும் வாசிக்க..
சனாதன தர்மம்- ஓர் அலசல்!
இந்து மதத்தினரும் பல்வேறு மாநில பாஜகவினரும், இந்து மதத்தை உதயநிதி ஸ்டாலின் அவமதித்துவிட்டதாகக் குற்றம் சாட்டி வருகின்றனர். அமைச்சர் உதயநிதிக்கு எதிராக டெல்லி மற்றும் பிஹாரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே சனாதன தர்மம் என்றால் என்ன என்ற கேள்வி எல்லோரின் மனதிலும் எழுந்திருக்கிறது. உண்மையில் சனாதன தர்மம் என்றால் என்ன?மேலும் வாசிக்க..
வண்டலூர் உயிரியல் பூங்கா நுழைவு கட்டணம் உயர்வு
பூங்காவிற்கு வரும் பெரியவர்களின் நுழைவு கட்டணம் ரூபாய் 115-இல் இருந்து ரூபாய் 200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பேட்டரி மூலம் இயக்கப்படும் வாகன கட்டணம், ரூபாய் 100-இல் இருந்து ரூபாய் 150-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. லயன்/ மான் உள்ளிட்ட சபாரி வாகன கட்டணம் ரூபாய் 50 லிருந்து ரூபாய் 150 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வீடியோ ஒளிப்பதிவு கட்டணம் ரூபாய் 500 ல் இருந்து ரூபாய் 750 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வெளிநாட்டை சேர்ந்தவர்களுக்கு 515 ரூபாய் இருந்து வந்த நிலையில், தற்பொழுது அவை குறைக்கப்பட்டு 200 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.மேலும் வாசிக்க..
அயோத்தி சாமியாரின் அறிவிப்பு அமைச்சர் உதயநிதி பதிலடி!
10 கோடி எதற்கு 10 ரூபாய் சீப்பு கொடுத்தால் நானே சீவி கொள்கிறேன் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அயோத்தி சாமியாரின் அறிவிப்புக்கு நக்கலாய் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து, தூத்துக்குடி ஒருங்கிணைந்த மாவட்ட திமுக இளைஞரணி செயல் வீரர்கள் கூட்டத்தில் பேசிய அமைச்சர் உதயநிதி, ”இனப்படுகொலை நடத்துவது பாரதிய ஜனதா கட்சிதான். மணிப்பூர் உள்ளிட்ட மாநிலங்களில் இனப்படுகொலையை அரங்கேற்றி வருகிறது. மேலும் வாசிக்க..
காய்கறி விலை நிலவரம்
ஆசியாவின் மிகப்பெரிய சந்தை என்றழைக்கப்படும் கோயம்பேடு சந்தையில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மொத்த விற்பனைக் கடைகள், 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறைக் கடைகள், 850 பழக்கடைகள் உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. மொத்த விற்பனை இரவு 10 மணி முதல் காலை 10 மணி வரையும், சில்லறை விற்பனை காலை 10 மணி முதல் இரவு 10 மணிவரையும் நடைபெறும். இங்கு நாள் ஒன்றுக்கு சுமார் 650க்கும் மேற்பட்ட வாகனங்களும் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் வாசிக்க..
திமுக எம்.பிக்கள் கூட்டம்..
செப்டெம்பர் 16 ஆம் தேதி திமுக எம்.பிக்கள் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற சிறப்பு கூட்டம் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. திமுக தலைவர் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. மேலும் வாசிக்க..
பா.ஜ.க, காங்கிரஸ் வெளியூர் எதிரி’ - சீமான் காட்டம்
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், ”கர்நாடகாவில் காங்கிரஸ் தேர்தல் வெற்றிக்கு முதல்வர் ஸ்டாலின் செல்கின்றார். ஆனால் காவிரி தண்ணீர் விவகாரத்தில் உரிய நெருக்கடியை அந்த கட்சிக்கு கொடுக்கவில்லை. இஸ்லாமிய சிறைக் கைதிகளை விடுதலை செய்ய வேண்டும். திமுக, அதிமுக உள்ளூர் எதிரி, பா.ஜ.க, காங்கிரஸ் வெளியூர் எதிரி. முதலில் வெளியூர் எதிரிகளை உள்ளே விடுவது தவறு. உள்ளூர் எதிரிகளை எப்பவேமேலும் வாசிக்க..ணும் என்றாலும் பார்த்து கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.மேலும் வாசிக்க..
உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி..
வடமேற்கு வங்க கடல் பகுதியில் நிலவிய வளிமண்டல சுழற்சியின் காரணமாக வடமேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்க கடலில் தெற்கு ஒடிசா வடக்கு ஆந்திரா கடலோரப் பகுதிகளுக்கு அருகே புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. இதன் காரணமாக வரும் 08 ஆம் தேதி வரை, தென்னிந்திய பகுதிகளில் தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் மிதமான அளவில் மழை தொடர்ந்து பெய்யும் வாய்ப்பு. இந்த நாட்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கும் வாய்ப்பு.மேலும் வாசிக்க..
பல்லடம் கொலை வழக்கு - கைதான நபருக்கு கால் முறிவு
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான செல்லமுத்து என்பவர் போலீசாரிடம் இருந்து தப்பிச் செல்ல முயன்றபோது காலில் முறிவு ஏற்பட்டுள்ளதாக வெளியாகியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அப்போது தொட்டம்பட்டி என்ற இடத்தில் கொலைக்கு பயன்படுத்திய கத்தியை காட்டுவதாக கூறி போலீசாரை அழைத்துச் சென்றுள்ளார். அங்கு போலீசாரிடம் இருந்து தப்பிச்செல்ல முயன்ற நிலையில் கீழே விழுந்து காலில் முறிவு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.மேலும் வாசிக்க..
மேட்டூர் அணையின் இன்றைய நிலவரம்...
கர்நாடகா மாநிலத்தில் பெய்து வந்த மழை காரணமாக அங்குள்ள அணைகள் நிரம்பி வருகிறது. தற்போது காவிரி கரையோர பகுதிகளில் மழை குறைந்து வருகிறது. இதனால் அங்கிருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்படுகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 6,430 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 8,060 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 6,428 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் வாசிக்க..