தமிழ்நாடு:
- சனாதனத்தை ஒழிக்கும் வரை திமுக போராடிக்கொண்டே இருக்கும் என அமைச்சர் உதயநிதி திட்டவட்டம் - தேசிய கட்சிகள் ஆதரவு
- பல்லடத்தில் 4 பேர் கொல்லப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் ஸ்டாலின் நிதியுதவி அறிவிப்பு
- வங்கக்கடலில் இன்று உருவாகிறது குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி - தமிழ்நாட்டில் அடுத்த மூன்று நாட்களுக்கு கனமழை பெய்யக்கூடும் என தகவல்
- இலாகா இல்லாத அமைச்சராக செந்தில் பாலாஜி தொடர்வதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு - உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்குகிறது
- காவிரி நீர் வராததால் தொகுதி பங்கீட்டில் காங்கிரசுக்கு நெருக்கடி தர வேண்டும் தி.மு.க : சீமான்
- பள்ளிக்கல்வித்துற சார்பில் 386 பேருக்கு நல்லாசிரியர் விருது இன்று வழங்கப்படுகிறது
- சென்னையில் மாற்றுத்திறனாளி தம்பதி ஆட்டோவில் தவற விட்ட நகை, செல்போனை 8 மணி நேரத்தில் மீட்டு உரியவர்களிடம் ஒப்படைத்த காவல்துறையினர்
இந்தியா:
- ஆதித்யா எல்1 விண்கலம் 3வது புவி சுற்றுவட்டப்பாதைக்கு வெற்றிகரமாக செலுத்தப்பட்டது -இஸ்ரோ
- டெல்லியில் இன்று கூடுகிறது இந்தியா கூட்டணியின் நாடாளுமன்ற குழு தலைவர்கள் ஆலோசனைக் கூட்டம் - ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பாக ஆலோசனை
- கேரளா உள்ளிட்ட 6 மாநிலங்களில் காலியாக உள்ள 7 சட்டசபை தொகுதிக்கு இன்று இடைதேர்தல்
- ”ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி” - காஷ்மீர் எம்.பி., பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு
- கொல்கத்தாவில் பள்ளி மாடியில் இருந்து குதித்து 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை - ஆசிரியர்கள் கிண்டல் செய்ததால் விபரீதம்
- கோலார் தங்க வயலின் முன்னாள் ஊழியர்களுக்கான நிலுவைத்தொகையை வழங்க, சயணைடு மண்ணை டெண்டரில் விட மத்திய அரசு திட்டம்
உலகம்:
- சிறப்பு பயிற்சிக்காக சுவிட்சர்லாந்து சென்ற இந்திய தடகள வீரர் நீரஜ் சோப்ராவிற்கு உற்சாக வரவேற்பு
- பாகிஸ்தானில் ஹெலிகாப்டர் விபத்து - 3 கடற்படை வீரர்கள் உயிரிழப்பு
- ஆயுத ஒப்பந்தம் குறித்து விவாதிக்க ரஷ்ய அதிபர் புதினை,வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன் இம்மாதம் சந்திக்க உள்ளதாக தகவல்
- காபோனில் ஆட்சி கவிழ்ப்பு - இடைக்கால அதிபராக ஜெனரல் பிரைஸ் நிகுமா பதவியேற்கிறார்
- யுரேனிய சேகரிப்பை வேகவேகமாக குறைந்து வரும் ஈரான்
- டெல்லியில் நடைபெறும் ஜி20 மாநட்டிற்கு சீன அதிபர் வராததால் அமெரிக்க அதிபர் பைடன் வருத்தம்
விளையாட்டு:
- ஆசியக் கோப்பை கிரிக்கெட்டில் நேபாளத்தை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது இந்திய அணி - டக்வர்த் லுஇயிஸ் முறைப்படி இலக்கை எட்டி அபாரம்
- உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிப்பு
- உலக்கோப்பையில் கேன் வில்லியம்சன் களமிறங்குவார் - நியூசிலாந்து அணி நிர்வாகம் அறிவிப்பு
- இந்திய கிரிக்கெட் அணியின் ஜஸ்பிரித் பும்ராவிற்கு ஆண் குழந்தை பிறந்தது - டிவிட்டரில் அறிவிப்பு
- அமெரிக்க ஓபன் டென்னிஸ் - நம்பர் ஒன் வீராங்கனையும், நடப்பு சாம்பியனுமான இகா ஸ்வியாடெக் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோல்வி