NEET Exam: நாடு முழுவதும் இன்று நடைபெறும் நீட் தேர்வு.. 20 லட்சம் மாணவர்கள் பங்கேற்பு.. கட்டுபாடுகள் என்ன? முழு விவரம்..


2023-24ம் ஆண்டுக்கான இளநிலை மருத்துவப்படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் இன்று பிற்பகல் தொடங்கியது. தமிழ்நாட்டில் நீட் தேர்வை 1.47 லட்சம் பேர் எழுதவுள்ளனர்.  நாடு முழுவதும் 20.87 லட்சம் பேர் தேர்வை எழுதுகின்றனர். மருத்துவ படிப்பதற்கான தேசிய தகுதித் தேர்வான நீட் தேர்வின் மூலம் எம்.பி.பி.எஸ், பி.டி.எஸ், சித்தா ,யுனானி ஆயுர்வேதா, மற்றும் ராணுவ மருத்துவ கல்லூரிகளில் பயிலும் பிஎஸ்சி நர்சிங் உள்ளிட்ட படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கையானது நடத்தப்படுகிறது. மேலும் படிக்க


CM Stalin : "ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை...போடாதவர்களுக்கும்" - ஒரே போடாய் போட்ட முதல்வர் ஸ்டாலின்!


ஓட்டுப்  போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். மேலும் படிக்க


தமிழ்நாட்டில் இன்று 18 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..


தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், சேலம், கள்ளக்குறிச்சி, ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், நாமக்கல், திருச்சிராப்பள்ளி, பெரம்பலூர், அரியலூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க


Cuddalore: இருவிரல் கன்னித்தன்மை சோதனை விவகாரம்...விசாரணையில் இறங்கிய சென்னை சிறப்பு மருத்துவ குழுவினர்!


சிதம்பரத்தில் குழந்தை திருமணம் தொடர்பாக சிறுமிகளுக்கு இரு விரல் கன்னித்தன்மை சோதனை நடத்தப்பட்டது என ஆளுநர் தெரிவித்த நிலையில் கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சென்னை சிறப்பு மருத்துவக்குழுவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் படிக்க

Crime: விழுப்புரத்தில் பள்ளம் தோண்டியபோது சிக்கிய பெண் சடலம் ... அதிர்ச்சியில் மக்கள்.. போலீசார் தீவிர விசாரணை!


விழுப்புரம் : கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஏரிவாய்க்காலில் கிராம மக்கள் பள்ளம் தோண்டிய போது இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க