விழுப்புரம் : கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் நூறு நாள் வேலை திட்டத்தில் ஏரிவாய்க்காலில் கிராம மக்கள் பள்ளம் தோண்டிய போது இளம் பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

விழுப்புரம் மாவட்டம் கஞ்சனூர் அருகேயுள்ள சாலவனூர் கிராமத்தில் மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் அப்பகுதி சார்ந்த கிராம மக்கள் சாலவனூர் சுடுகாடு ஏரி வாய்க்காலில் பணி செய்து கொண்டிருந்தனர். அப்போது ஏரி வாய்க்காலில் மகாதமா ஊரக வேலைவாய்ப்பு திட்ட பணியில் பள்ளம் தோண்டியுள்ளனர். அப்போது 3 அடி பள்ளம் தோண்டியபோது கை ஒன்று தெரியவே அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் அருகிலுள்ள கஞ்சனூர் காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.

அந்த தகவலின் பேரின் விரைந்து வந்த போலீசார் சம்பவ இடத்தில் மேலும் பள்ளம் தோண்டி பார்த்த போது 25 வயது மதிக்க தக்க இளம் பெண் புதைக்கப்பட்டிருந்ததும் கையில் காயம் இருந்தது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் உடலை கைப்பற்றி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். சாலவனூர் பகுதியில் 25 வயதுடைய பெண் யாரும் இறக்கவில்லை என்றும் இளம் வயது பெண் காணாமல் போனதாக புகார்கள் ஏதும் வரவில்லை என்பதால் மர்ம நபர்கள் இளம் பெண்ணை கொலை செய்து சாலவனூர் சுடுகாட்டு பகுதியில் புதைத்துவிட்டு சென்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகின்றனர். நூறு நாள் வேலை உறுதி திட்டத்தில் ஏரிவாய்க்காலில் பள்ளம் தோண்டியபோது இளம் பெண் சடலம் கண்டெடுக்கபட்டது அப்பகுதியில் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ளது.

Continues below advertisement

 


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண