CM Stalin : ஓட்டுப்  போடாதவர்கள் வருத்தப்படும் அளவிற்கு தமிழகத்தில் ஆட்சி நடைபெற்று வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 


தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இந்நிலையில், முதல்வர் ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள முன்னாள் முதல்வர்கள் அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்வின்போது உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, பொன்முடி, டி.ஆர்.பாலு உள்ளிட்டவர்கள் உடன் இருந்தனர். 


இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் ஸ்டாலின், ”இந்த ஆட்சி வாக்களித்தவர்கள் மட்டுமல்ல வாக்களிக்கதாவர்களுக்கும் சேர்த்துதான். இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லையே என்று வருந்தும் அளவுக்கு ஆட்சி நடைபெற்று வருகிறது. ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையனும். ஓட்டு போடாதவர்கள் இப்படி பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடாமல் விட்டு விட்டோமே என்று வருத்தப்படனும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.


3ஆம் ஆண்டில் திமுக ஆட்சி


முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பொறுப்பேற்று இன்றுடன் (மே 7)  இரண்டு ஆண்டை முழுமையாக நிறைவு செய்துள்ளது. இதனை அடுத்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. 10 வருடங்களுக்கு பிறகு திமுக தலைமையிலான ஆட்சி தமிழ்நாட்டைக் கைப்பற்றியதால் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியது.


இந்த இரண்டு ஆண்டு கால திமுக ஆட்சியில் பல்வேறு திட்டங்கள், சாதனைகளை நிகழ்த்தி இருந்தாலும் விமர்சனங்களுக்கு விட்டு வைக்கவில்லை. அதன்படி, திமுக ஆட்சியில் மகளிர் உரிமைத்தொகை ரூ.1,000, புதுமைப் பெண் திட்டம், காலை உணவுத் திட்டம், மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து, நான் முதல்வன் திட்டம், இல்லம் தேடி கல்வித் திட்டம், எண்ணும் எழுத்தும் திட்டம், விவசாயிகள் நலன், ரூ,4,805 கோடியில் நகைக் கடன் தள்ளுபடி, ஆன்லைன் சூதாட்ட தடை சட்டம் ஆகியவை ஆட்சியின் முக்கிய அம்சங்களாக பார்க்கப்படுகிறது.


இந்நிலையில், பல்வேறு திட்டங்களை அறிவித்து செயல்படுத்தினாலும், பல விமர்சனங்களில் சிக்கி திமுக அரசு இரண்டு ஆண்டுகளை நிறைவு செய்து மூன்றாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது.


 ”இது ஓட்டுப் போடாதவர்களுக்குமான ஆட்சி” 


இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முன்னாள் முதலமைச்சர்கள் அறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி ஆகியோர் நினைவிடங்களில் மரியாதை செலுத்தினார்.


இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, ”ஆட்சி பொறுப்பேற்று இதே இடத்தில் நான் கூறினேன். இந்த ஆட்சி ஓட்டு போட்டவர்களுக்கு மட்டும் இல்லை. ஓட்டு போடாதவர்களுக்குமான ஆட்சி. இந்த ஆட்சிக்கு ஓட்டு போட்டவர்கள் மகிழ்ச்சி அடையனும்; ஓட்டு போடாதவர்கள் இப்படிப்பட்ட ஆட்சிக்கு ஓட்டு போடவில்லை என்று வருந்த வேண்டும். அந்த அடிப்படையில் ஆட்சி இருக்கும் என்று அன்றே சொன்னேன். அப்படிதான் இந்த ஆட்சி இருக்கிறது” என்று தெரிவித்தார். 


மேலும், விமர்சனங்கள் பற்றி எதுவும் நான் கவலைப்படவில்லை. நல்லதை எடுத்து கொள்வேன்; கெட்டதை புரந்தள்ளி விடுவேன். தொடர்ந்து இரண்டு ஆண்டு முழுவதும் எப்படி ஒத்துழைப்பு வழங்கினீர்களோ, அதேபோன்று மூன்றாம் ஆண்டிலும்  ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்" என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.