• சாதி மதம் என மக்களைப் பிரித்து பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் புரியாது - முதலமைச்சர் ஸ்டாலின் பதிலடி..!




திமுக ஆட்சி அமைந்து இன்றுடன் இரண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் மக்களுக்கு வழங்கப்பட்டது. அப்போது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், மக்களை சாதியால், மதத்தால், அதிகாரத்தால், ஆணவத்தால் பிரித்துப் பார்ப்பவர்களுக்கு திராவிட மாடல் என்பது புரியாது, தமிழ்நாடு மக்களுக்கு திராவிட மாடல் என்பது நன்றாகவே புரியும் என தெரிவித்தார். மேலும் படிக்க




  • வங்கக்கடலில் உருவாகிறது புதிய புயல்..! 18 மாவட்டங்களில் இன்று வெளுக்கப்போகுது மழை..!




தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுநாள் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகிறது. அது 9ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மத்திய வங்கக்கடலில் புயலாக வலுப்பெற கூடும். இதனால்  இராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோயம்புத்தூர், நீலகிரி மற்றும் ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. மேலும் படிக்க




  • சென்னையில் மழை இருக்குதான்.. அதனால் CSK VS MI போட்டி?... வெதர்மேன் கொடுத்த அப்டேட் இதுதான்..!




சென்னையில் மழை பெய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் எந்த பாதிப்பும் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், “சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்  அணிகள் போட்டி தடைபடும் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. போட்டி நிச்சயம் முழுவதுமாக நடைபெறும்” என தெரிவித்துள்ளார்.  மேலும் படிக்க




  • மதுரை சித்திரை திருவிழாவில் ஒரே நாளில் 5 பேர் உயிரிழப்பு - பொதுமக்கள் அதிர்ச்சி




மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளிய நிகழ்ச்சிக்காக மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வைகையாற்று பகுதிக்கு நேற்று வருகை தந்திருந்தனர். இதில் 3 பேர் நீரில் மூழ்கியும், மதுரை எம்.கே புரம் பகுதியைச் சேர்ந்த  23 வயது இளைஞர் மர்மமான முறையிலும், கூட்ட நெரிசலில் சிக்கி ஒருவரும் என 5 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் படிக்க




  • ஆளுநர் என்ன ஆண்டவரா..? நியமன பதவியில் இருப்பவர் சொல்வதை கேட்கணுமா? அமைச்சர் சேகர்பாபு காட்டம்




ஆளுநர் என்ன ஆண்டவரா..? ஆண்டு கொண்டிருப்பது தமிழ்நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஆட்சி. ஆகவே, நியமன பதவியில் வந்த ஆளுநர் கூறுவதை எல்லாம் கேட்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. மக்களின் நன்மைகளை நோக்கிதான் ஆட்சி செல்லும் என்று அமைச்சர் சேகர் பாபு காட்டமாக தெரிவித்துள்ளார். இரு தினங்கள் முன்பு தமிழ்நாடு அரசை விமர்சித்து ஆளுநர் ஆர்.என்.ரவி ஆங்கில நாளிதழுக்கு நேர்காணல் கொடுத்திருந்தார். அதற்கு பதிலடியாகவே அமைச்சர் சேகர்பாபுவின் பதில் பார்க்கப்படுகிறது. மேலும் படிக்க