ஐபிஎல் 2023 தொடரின் 49வது போட்டியில் இன்று சென்னை சேப்பாக்கத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன. பெரும்பாலும் இந்த போட்டிகள் மழையால் பாதிக்க வாய்ப்புள்ளதாக தகவல் பரவி வருகிறது. 


இந்தநிலையில், சென்னையில் மழை பெய்தாலும், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கிடையேயான போட்டியில் எந்த பாதிப்பும் இருக்காது என தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது பேஸ்புக்கில், “சென்னையில் இன்று லேசான மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. ஆனால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ்  அணிகள் போட்டி தடைபடும் அளவிற்கு மழை பெய்ய வாய்ப்பில்லை. போட்டி நிச்சயம் முழுவதுமாக நடைபெறும்” என தெரிவித்துள்ளார். 



மேலும், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்ட வடதமிழகத்தில் தொடர்ந்து மழை இருக்கும் என குறிப்பிட்டார். அதில், “வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, விழுப்புரம், தருமபுரி, கள்ளக்குறிச்சி, சேலம், பெரம்பலூர், அரியலூர், கடலூர் மற்றும் டெல்டா பகுதிகளில் இன்று மழைக்கு வாய்ப்பு உள்ளது.” என்றும் குறிப்பிட்டார். 


18 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை: 


வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. அதன்படி, திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, ஈரோடு உள்ளிட்ட 18 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. 


தமிழ்நாடு, புதுச்சேரி நாளை முதல் 4 நாட்களுக்கு மே 10ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


மீனவர்கள் கடலுக்கு செல்ல தடையா? 


06.05.2023:  குமரிக்கடல் , மன்னார் வளைகுடா உள்ளிட்ட தமிழக கடலோரப்பகுதிகள், தென்கிழக்கு  -  தென் மேற்கு வங்கக்கடல்,   தெற்கு அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. 


07.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல்  பகுதிகள், தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள் மற்றும் இலங்கை கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


08.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.
தெற்கு அந்தமான் கடல் பகுதிகள்,  தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் தெற்கு பகுதிகள்,  இலங்கை கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.


09.05.2023: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 முதல் 60 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 70  கிலோ மீட்டர் வேகத்திலும்  மற்றும் அதனை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல்,  மத்திய வங்கக்கடல் மற்றும்  அந்தமான் கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 40 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55  கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.