TN Headlines Today June 29: 


CM Stalin on PM Modi: பிரதமருக்கு வரலாறு தெரியல.. பொது சிவில் சட்டம்.. குழப்பம் விளைவிக்க முயற்சி.. முதலமைச்சர் குற்றச்சாட்டு


சென்னை அண்ணா அறிவாலயத்தில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் மற்றும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் பிரதமர் மோடிக்கு வரலாறு தெரியவில்லை என தெரிவித்துள்ளார். மேலும், நல்லதை கூட ஜாக்கிரதையாக, நிதானமாக செய்ய வேண்டிய நிலையில் உள்ளோம். 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டை ஆட்சி செய்தது திராவிட இயக்கம் தான். தமிழ்நாடு வளர்ச்சியடைந்ததை கண்டு பிரதமர் பேச வேண்டும் என கூறியுள்ளார்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-chief-minister-m-k-stalin-said-that-prime-minister-modi-does-not-know-history-125847/amp


Melmaruvathur Temple: மேல்மருவத்தூர் கோயில் ஆக்கிரமிப்பு; அகற்ற சொன்ன நீதிமன்றம் - தலையசைத்த தமிழக அரசு


மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோயில் நிர்வாகத்தால் செய்யப்பட்டுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றக்கோரி தேசிய நெடுஞ்சாலை துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.  அதே போன்று மேல்மருவத்தூர காவல் நிலையம் மற்றும் தபால் நிலையத்திற்கு செல்ல வழி இல்லை என்பதால் அதற்கு வழி ஏற்படுத்தி தர நீதிபதி அறிவித்துள்ளார். மூன்று வாரங்களுக்குள் இந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட வேண்டும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/chennai/melmaruvathur-siddhar-peedam-madras-high-court-action-order-to-remove-owned-encroachments-tnn-125875/amp


New Chief Secretary: புதிய தலைமை செயலாளராக சிவ்தாஸ் மீனா நியமனம்.. தமிழ்நாடு அரசு அதிரடி அறிவிப்பு..!


தமிழ்நாடு தலைமை செயலாளராக இருந்த இறையன்பு, 60 வயது பூர்த்தியடைந்ததை அடுத்து அவர் நாளை பணி ஓய்வு பெறுகிறார். இதனால் அடுத்த தலைமை செயலாளர் யார் என்ற கேள்வி நிலவி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அப்போது சீனியாரிட்டி, பணி திறன் உள்ளிட்டவை கருத்தில் கொண்டு 13 பேரின் பெயர்கள் பட்டியலில் இடம்பெற்றதாக கூறப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-government-has-appointed-shivdas-meena-as-the-new-chief-secretary-of-tamil-nadu-125891/amp

 


TN Rain Alert: இன்னும் 5 நாட்களுக்கு மழை இருக்கும்.. வெயிலின் தாக்கம் அதிகரிக்குமா? இன்றைய வானிலை நிலவரம்...






மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 29.06.2023 மற்றும் 30.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். 01.07.2023 மற்றும் 02.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-meteorological-department-there-will-be-moderate-rain-in-tamil-nadu-for-the-next-5-days-more-deets-125885/amp


Whatsapp DP : மாணவிகள் வாட்ஸ்-அப் DP புகைப்படம் வைக்கக்கூடாது.. மகளிர் ஆணைய தலைவர் குமாரி பேச்சு


கல்லூரி மாணவிகள் DP-யில் புகைப்படங்களை வைக்க வேண்டாம் டெக்னாலஜி எவ்வளவு நன்மை செய்து இருக்கிறதோ அதே அளவு தீமைகளும் செய்து கொண்டிருக்கிறது அதனை எப்படி கையாள வேண்டும் என்பது முக்கியம். மகளிர் ஆணையத் தலைவர் குமாரி அறிவுறுத்தியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/women-s-commission-chairman-kumari-said-that-college-students-should-not-post-photos-on-whatsapp-125876/amp