விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் அரசு பேருந்தின் படிக்கட்டில் ஓட்டுநர் நின்றபடி சிறுநீர் கழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் இருந்து நேற்று காலை கல்லூரி மாணவர்களை ஏற்றிக்கொண்டு அரசு பேருந்து மேல்பாக்கம் வரை சென்றது. அங்கு கல்லூரி மாணவர்களை இறக்கி விட்டு, பின்னர் மீண்டும் பேருந்து திண்டிவனத்திற்கு சென்று கொண்டிருந்தது. அய்யந்தோப்பு அருகே அரசு பேருந்து சென்ற போது, பேருந்தின் ஓட்டுநர் பேருந்து சாலை ஓரம் நிறுத்தினார். பின்னர் பேருந்தின் இருக்கையில் இருந்து இறங்கி, பேருந்தின் படிக்கட்டில் நின்றபடி சிறுநீர் கழித்தார்.


இதனை அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள், பெண்கள், கல்லூரி மாணவ மாணவிகள் முகம் சுளித்தபடி, ஓட்டுநரை கடுமையாக விமர்சித்தபடி சென்றனர். பேருந்தை கடவுளாக நினைக்க வேண்டிய அரசு பேருந்து ஓட்டுனர், சாலை ஓரம் பேருந்தில் நின்றபடி சிறுநீர் கழித்த சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.


 




மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்


ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூடியூபில் வீடியோக்களை காண