TN Rain Alert: தமிழ்நாட்டில் மழை நீடிக்கும்.. சென்னையில் மழை வெளுக்குமா? இன்றைய வானிலை நிலவரம் இதோ..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 23.06.2023 மற்றும் 24.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 25.06.2023 முதல் 27.06.2023 வரை: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/according-to-meteorological-department-rain-will-continue-in-tamil-nadu-for-the-next-5-days-due-to-change-in-speed-of-western-wind-124741/amp
Tamilkudal Program: அரசுப் பள்ளிகளில் ஆண்டுதோறும் 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த உத்தரவு; விதிகள் வெளியீடு
தமிழகத்தில் உள்ள 6,218 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆண்டுக்கு 3 தமிழ்க்கூடல் நிகழ்ச்சிகள் நடத்த, ஒவ்வொரு பள்ளிக்கும் ரூ.9 ஆயிரம் வீதம் ரூ.5.59 கோடி நிதி ஒதுக்கி அரசு ஆணையிட்டுள்ளது. பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அறிவொளி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கும் தமிழ்க்கூடல் நிகழ்ச்சி குறித்து சுற்றறிக்கையை அனுப்பியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/education/tamilkudal-program-in-govt-school-tn-govt-order-allocated-funds-124730/amp
Kovai Bus Driver Sharmila: கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநர் ஷர்மிளா பணிநீக்கமா? ராஜினாமாவா..? - நடந்தது என்ன..?
கோவையின் முதல் பெண் பேருந்து ஓட்டுநராக பணியாற்றிய ஷர்மிளாவிற்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்துகளை தெரிவித்தனர். பாஜக தேசிய மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் ஷர்மிளா இயக்கிய பேருந்தில் பயணித்து, வாழ்த்துகளை தெரிவித்தார். இதேபோல இன்று திமுக துணை பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான கனிமொழி, காந்திபுரம் பேருந்து நிலையத்தில் ஷர்மிளாவை நேரில் சந்தித்து கைகுலுக்கி வாழ்த்து தெரிவித்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/coimbatore/coimbatore-first-woman-bus-driver-sharmila-resigned-her-job-says-bus-owner-tnn-124761/amp
Tiruvannamalai: ஜாதி சான்றால் கல்லூரியில் சேர முடியவில்லை; மாணவி விபரீத முடிவு - திருவண்ணாமலையில் சோகம்
திருவண்ணாமலை அடுத்த திருக்கோவிலூர் செல்லும் சாலையில், எடப்பாளையம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் எம்.ஜி.ஆர் நகர் பகுதியில் சுமார் 30 ஆண்டுகளுக்கும் மேலாக 40-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 80-நபர்கள் வாழ்ந்து வருகின்றனர். இந்த பகுதிகளில் வாழ்ந்து வரும் மக்களின் பிரதானத் தொழில் பன்றி வளர்ப்பதாக இருந்து வருகிறது. இந்நிலையில், திருவண்ணாமலையில் ஜாதி சான்று இல்லாததால் கல்லூரி படிப்பை தொடர முடியாத மாணவி பூச்சி மருந்து குடித்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார். மேலும் படிக்க https://tamil.abplive.com/crime/tiruvannamalai-student-could-not-continue-her-college-studies-due-to-her-caste-certificate-died-after-consuming-pesticides-tnn-124652/amp
இதை செய்யுங்கள்.. செய்யவில்லை என்றால் பணம் வராது.. விவசாயிகளுக்கு காஞ்சிபுரம் ஆட்சியர் சொன்ன தகவல்..!