TN Headlines Today:  



  • ரூ.762 கோடி மதிப்பில் 4.0 தொழில்நுட்ப மையங்கள்..


தமிழக முழுவதும் 22 அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில் ரூ.762.30 கோடி மதிப்பில் டாடா டெக்னாலஜி நிறுவனத்துடன் இணைந்து அமைக்கப்பட்டுள்ள தொழில் 4.O தொழில்நுட்ப மையம் துவக்க விழா காஞ்சிபுரம் மாவட்டம் அரசு தொழில் பயிற்சி மையத்தில் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.


இந்த நிகழ்ச்சியின்போது தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி. கணேசன், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் துறை அமைச்சர் தாமோ அன்பரசன், நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா ஸ்ரீபெரும்புதூர் சட்டமன்ற உறுப்பினர் செல்வ பெருந்தகை, டாட்டா சன் குழுமத்தின் தலைவர் சந்திரசேகரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் வாசிக்க..



  • மன உளைச்சலுக்கு ஆளாக்கினாரா ககன்தீப் சிங் பேடி? 


தற்கொலை செய்து கொள்ளும் அளவிற்கு தன்னை துன்புறுத்தியதாக, தற்போதைய சுகாதாரத்துறை செயலாளராக உள்ள ககன் தீப் சிங் பேடி மீது ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியர் குற்றம்சாட்டியுள்ளார்.


சாதிய கொடுமை - கூடுதல் ஆட்சியரின் கடிதம்:


அதில் ”கடந்த 14/06/21 முதல் 13/06/22 வரை சென்னை மாநகராட்சியின் துணை ஆணையராக பணியாற்றினேன். ககன்தீப் சிங் பேடியின் கீழ் பணியாற்றிய அந்த காலகட்டத்தில் எனக்கு கிடைத்த அனுபவங்களை உங்களது கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன். குறிப்பிட்ட பணிக்காலத்தின் போது ககன் தீங் பேடியின் மோசமான நடவடிக்கைகளையும், தொல்லைகளையும் நான் எதிர்கொண்டேன். குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவன் என்பதை அறிந்து உள்நோக்கத்துடன் அவர் அவ்வாறு செயல்பட்டார்.மேலும் வாசிக்க..



  • ஸ்டான்லி மற்றும் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி தடையின்றி இயங்கும்.. 


சென்னை ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி மற்றும் தர்மபுரி மருத்துவக் கல்லூரி மேலும் ஐந்து ஆண்டுகளுகள் இயங்குவதற்கு தடை இல்லை என NMC நிறுவனம் மருத்துவ குழு அறிக்கை அனுப்பியுள்ளது என மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.


கலைஞரின் நூற்றாண்டு பிறந்த நாளை முன்னிட்டு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் 500 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை முதலமைச்சர் திறந்து வைத்தார் அதன் தொடர்ச்சியாக சென்னை சைதாப்பேட்டை அப்பாவு நகரில் புதிதாக திறக்கப்பட்டுள்ள நகர்ப்புற நலவாழ்வு மையத்தை மருத்துவமனை மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் பார்வையிட்டார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்ரமணியன், “மத்திய அரசால் கடந்த மாதம் மருத்துவ இடங்களுக்கு பொதுக்கலந்தாய்வு நடத்துவதற்கு ஒரு வரைவு அனுப்பப்பட்டது.  உடனடியாக முதலமைச்சரிடம் ஆலோசனை நடத்தி அவரின் அறிவுறுத்தலின் பேரில் துறையின் செயலாளர் மூலம் ஆட்சேபனை தெரிவித்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. மருத்துவமனை மருத்துவம் தொடர்பான கொள்கைகளில் அதன் மீது சட்டம் இயற்றுவது என்பது மாநிலத்தின் உரிமை சார்ந்தது. மாநில அரசுகளே  கவுன்சிலிங் நடத்திக் கொள்ளலாம் என  இன்றைக்கு மத்திய அரசு நமக்கு  கடிதம் அனுப்பியுள்ளது” என தெரிவித்தார்.மேலும் வாசிக்க..



  • 'ஓய்வுக்கு பிறகு எந்த பதவியும் வேண்டாம்’ அரசு தர முனைந்த பொறுப்பை துறந்தார் இறையன்பு ஐ.ஏ.எஸ்..!


எழுத்தாளர், நேர்மையாளர், சிறந்த நிர்வாகி, பேச்சாளர் என்ற பன்முகதன்மை கொண்ட  மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியான இறையன்பு, அவரது ஓய்வுக்கு பிறகு அரசு தர முன் வந்த தமிழ்நாட்டின் மிக முக்கிய பதவியை துச்சமென நினைத்து தூக்கியெறிந்திருக்கிறார்.


தகவல் ஆணையர் பதவியை நிராகரித்த இறையன்பு


ஆட்சி அமைந்தது முதல் இரவு, பகல் பாராது மக்கள் நலத் திட்டங்களை சரியாக செயல்படுத்துவதிலும் சமூக வலைதளங்களில் ஒரு புகார் வந்தால் கூட அதனை தீர விசாரித்து நடவடிக்கை எடுப்பதிலும் சுறுசுறுப்பாக செயல்பட்ட தலைமைச் செயலாளர் இறையன்பு இந்த மாதத்தோடு ஓய்வு பெறுகிறார். அர்ப்பணிப்பு, நேர்மை, பெரிய பதவியில் இருப்பவர் என்று நினைக்காமல் களத்தில் இறங்கி பணி செய்யும் மாண்பு என்று இருக்கும் அவரை விட்டுவிட வேண்டாம் என்று நினைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது ஓய்வுக்கு பிறகு தமிழ்நாட்டின் மிக முக்கியமான பதவியான தலைமை செயலாளருக்கு நிகரான அந்தஸ்துள்ள தலைமை தகவல் ஆணையர் பதவி கொடுக்க நினைத்தார்.மேலும் வாசிக்க..



  • வானிலை அறிவிப்பு:


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:


அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 40-41 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 29-30 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கும். இன்று தென்மேற்கு பருவமழை கேரள பகுதிகளில் துவங்கியுள்ளது. மேலும் இது தென்தமிழக பகுதிகளிலும் பரவி உள்ளது.


வெப்ப சலனம் காரணமாக, அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


09.06.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில்  ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும்.மேலும் வாசிக்க..