CM Stalin Letter To President: அடுத்த அதிரடி.. ஆளுநர் ரவி மீது 15 பக்க புகார், குடியரசு தலைவருக்கு பறந்த முதலமைச்சர் ஸ்டாலினின் கடிதம்


ஆளுநர் ரவி மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்து குடியரசு தலைவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். ஆளுநர் ரவி மீது புகார் தெரிவித்து குடியரசு தலைவர் திரவுபதி முர்முவிற்கு, முதலமைச்சர் ஸ்டாலின் 15 பக்க கடிதம் எழுதியுள்ளார். அமைச்சர் செந்தில் பாலாஜி விவகாரத்தில் அரசுக்கு எதிராக ஆளுநர்  செயல்பட்ட நிலையில் இந்த கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஆளுநர் தற்போது டெல்லியில் உள்ள சூழலில், முதலமைச்சர் ஸ்டாலின் இந்த கடிதத்தை எழுதியுள்ளார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/complaint-against-governor-ravi-letter-sent-to-the-president-chief-minister-stalin-s-action-127766/amp


Annamalai Tweet: ' தமிழக முதல்வருக்கு பயம் வந்துவிட்டது.. கொடுக்காத வாக்குறுதிகளை கொடுத்ததாக கூறுகிறார்’ - அண்ணாமலை ட்வீட்..


கடந்த 2014 ஆம் ஆண்டில் பா.ஜ.க கொடுக்காத வாக்குறுதிகளை, பிரதமர் மோடி அளித்ததாக பேசி வருகிறார் என்றும் ஊழல்வாதிகள் வெளிநாட்டில் பணத்தை ஒதுக்கி வைத்துள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்தார் என்றும் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  அந்த டிவிட்டர் பதிவில், “ தமிழக முதல்வருக்கு தோல்வி பயம் மூண்டு விட்டது போல் தெரிகிறது. ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் முடிந்த பின்னரும் 90 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஊழல் ஆட்சியை நடத்திவரும் தமிழக முதல்வர், 2014ஆம் ஆண்டு மத்திய பாஜக அரசு கொடுக்காத தேர்தல் வாக்குறுதிகளைக் கொடுத்ததாக பேசி வருகிறார். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/bjp-state-president-annamalai-has-said-that-the-chief-minister-of-tamil-nadu-is-saying-that-prime-minister-modi-has-made-promises-that-were-not-made-127768/amp


TN Rain Alert: கோவை மற்றும் நீலகிரியில் கனமழைக்கு வாய்ப்பு.. அடுத்த 6 நாட்களுக்கு மழை தொடரும்.. இன்றைய மழை நிலவரம் இதோ..






 மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  09.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 10.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை  பெய்யக்கூடும். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/heavy-rains-will-occur-in-nilgiris-and-coimbatore-districts-in-tamil-nadu-today-according-to-the-meteorological-department-127759/amp


Police Mental Health : மன அழுத்தத்தைப் போக்க, போலீசார் தங்களுடைய குடும்பத்துடன் நேரம் செலவிடவேண்டும் : டி.ஜி.பி. சங்கர் ஜிவால்.





தமிழக காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டி.ஜி.பி.யாக இருந்த சைலேந்திரபாபு ஓய்வுபெற்ற நிலையில், சென்னை போலீஸ் கமிஷனராக இருந்த சங்கர் ஜிவால், புதிய டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார். மேலும் அவர் பதவியேற்றுக் கொண்டபோது, `ரவுடிகளுக்கு எதிரான, கள்ளச்சாராயத்துக்கு எதிரான நடவடிக்கை தொடரும். பொதுமக்கள் மற்றும் போலீசாரின் குறைகளை தீர்க்கும் வகையில் அவர்களின் மனுக்களை அரசு விடுமுறை நாட்கள் தவிர தினமும் காலை 11.30 மணிக்கு டி.ஜி.பி. அலுவலகத்தில் நேரில் பெறுவேன்.  மேலும் படிக்க https://tamil.abplive.com/news/trichy/cops-should-spend-more-time-with-their-families-to-de-stress-dgp-shankar-jiwal-127735/amp

 


OPS Statement: மகளிர் உரிமை தொகையை பெற பல்வேறு நிபந்தனைகளை விதித்துள்ள திமுக அரசுக்கு கண்டனம் - ஓபிஎஸ் அறிக்கை..


இது தொடர்பான அறிக்கையில், “ தி.மு.க வின் தேர்தல் அறிக்கையிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/o-panneer-selvam-has-issued-a-statement-against-the-dmk-government-which-has-imposed-various-conditions-to-get-the-women-s-rights-amount-127758/amp