இது தொடர்பான அறிக்கையில், “ தி.மு.க வின் தேர்தல் அறிக்கையிலே மகளிர் உரிமைத் தொகை வழங்கப்படும் என்றுதான் அறிவிக்கப்பட்டு இருக்கிறதே தவிர, அதற்கான நிபந்தனைகள் ஏதும் சொல்லப்படவில்லை. இதனால், குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில், 2021 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் மக்கள் தி.மு.க.விற்கு வாக்களித்தனர். இந்த வாக்குறுதி நிறைவேற்றப்படுகிறது என்று சொன்னால், கிட்டத்தட்ட 2 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளில் உரிமைத் தொகை வழங்கப்பட வேண்டும் ஆனால், இந்த உரிமைத் தொகையினை பெறுவதற்கான வழிமுறைகளள- பார்க்கும்போது, தகுதியுள்ளவர்களை கண்டுபிடிப்பதே மிகவும் சிரமம்,

Continues below advertisement


உதாரணமாக, ஒரு குடும்ப அட்டைக்கு ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்க தகுதியானவர் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. அதே சமயத்தில், ஆண்டு வருமானம் 2.5 இலட்சம் ரூபாய்க்கு கீழ் வருமான ஈட்டு குடும்பங்கள் மட்டுமே மகளிர் உரிமைத் தொகை பெற தகுதியுடையவர்கள் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், ஒரு குடும்பத்தில் இரண்டு மூன்று பேர் வேலைக்குச் சென்று, அவர்களின் ஒட்டுமொத்த வருமாளம் 2 இலட்சத்திற்கு மேலாக சென்றால், அந்தக் குடும்பத்தில் உள்ள மகளில், உரிமைற் தொகையை பெற முடியாது. ஒரு குடும்பத்தில் ஒரு பயனாளி மட்டுமே விண்ணப்பிக்கலாம் என்று சொல்லும் அரசு, அக்குடும்பத்தில் உள்ள அனைவரின் வருமானத்தையும் கணக்கெடுப்பது என்பது இயற்கை நியதிக்கு முரணானது.


அதேபோல, ஆண்டுக்கு 2.50 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்று, வருமான வரி தாக்கல் செய்பவர்கள் இந்தத் திட்டத்தில் பயன் பெற தகுதியில்லை என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதன்படி பார்த்தால், ஒரு குடும்பத்தில் ஆண் ஒருவர் ஆண்டுக்கு 2.50 இலட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் பெற்று, வரி வராவிட்டாலும், வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்தால் அவருடைய குடும்பத்தில் உள்ள மகளிர், உரிமைத் தொகையை கோர முடியாது. ஆண்டுக்கு 7 இலட்சம் ரூபாய் வரை வருமானம் ஈட்டுவோர் வருமான வரி செலுத்தத் தேவையில்லை என்று வருமான வரிச் சட்டம் கூறுகின்ற நிலையில், 2.50 இலட்சம் ரூபாய் என்று வருமான வரம்பினை விதிப்பது ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல


இதிலே குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால், ரேஷன் அட்டை, ஆதார் அட்டை போன்றவை இல்லை என்றாலும், அவர்களுக்கு உதவித் தொகை வழங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இந்த விதியின் மூலம், சில இலட்சம் தி.மு.க.வினருக்கு மட்டும் மகளிர் உரிமைத் தொகையை அளித்துவிட இந்த வாக்குறுதி நிறைவேற்றப்பட்டுவிட்டது என்று மார்தட்டிக் கொள்ள திமு அரசு முயலுகிறதோ என்ற சந்தேகம் மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. ஒருவேளை இதுதான் திராவிட மாடல் ஆட்சி போலும்!


இந்தத் திட்டத்தின்கீழ் கிட்டத்தட்ட ஒரு கோடி மகளிர் பயன் பெறுவர் என முதலமைச்சர் அவர்கள் தெரிவித்திருந்த நிலையில், தற்போது: விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளைப் பார்த்தால், ஒரு சில இலட்சம் மகளிர்கூட இத்திட்டத்தின் கீழ் பயன் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. நகைக்கடன் போல இதுவும் ஒரு ஏமாற்று வேலை என்பதை மகளிர் புரிந்து கொண்டுவிட்டார்கள்.


'சொன்னதை செய்வோம்' என்பதற்கேற்ப, அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று முதலமைச்சர் அவர்களை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்” என குறிப்பிடப்பட்டுள்ளது.