TN Headlines Today:
Minister Ponmudi: நில அபகரிப்பு வழக்கில் அமைச்சர் பொன்முடி விடுதலை; சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு
போலி ஆவணங்கள் மூலம் அரசு நிலத்தை அபகரித்ததாகக் கூறி அமைச்சர் பொன்முடி மீது லஞ்ச ஒழிப்புத்துறை தொடுத்த வழக்கில், போதிய ஆவணங்கள் இல்லை என்றுகூறி, அமைச்சர் பொன்முடியை சென்னை சிறப்பு நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. 1996ஆம் ஆண்டு போக்குவரத்துத் துறை அமைச்சராக பொன்முடி இருந்தபோது இந்த வழக்கு தொடுக்கப்பட்டது. 1996ம் ஆண்டு முதல் 2001ம் ஆண்டு வரை போக்குவரத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி சைதாப்பேட்டை ஸ்ரீநகரில் உள்ள வடக்கு காலனி பகுதியில் 3,650 சதுர அடி நிலத்தை அபகரித்ததாக குற்றம்சாட்டப்பட்டது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/minister-ponmudi-acquitted-in-land-grab-case-special-court-judgment-127151/amp
CO-OP Bazaar: வீடு தேடி வரும் கூட்டுறவுத்துறை பொருட்கள்.. தமிழ்நாடு அரசின் அசத்தல் நடவடிக்கை..பொதுமக்கள் வரவேற்பு..!
கூட்டுறவுத்துறை நிறுவனங்களின் தயாரிப்புகளை பெரிய அளவில் சந்தைப்படுத்துவதற்காக புதிய செயலியை தமிழ்நாடு அரசு சார்பில் புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதனை அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு அரசின் கூட்டுறவுத்துறையின் கீழ் பல்வேறு நிறுவனங்கள் பொருட்களை தயாரித்து சந்தைப்படுத்தி வருகின்றன. இதனை மேலும் விரிவுப்படுத்தும் விதமாக அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் CO-OP Bazaar என்னும் கூட்டுறவு சந்தைக்கான செயலி உருவாகப்பட்டுள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tn-government-cooperative-sector-launched-new-app-co-op-bazaar-127192/amp
TN Rain Alert: இன்றும் நாளையும் தமிழ்நாட்டில் கனமழைக்கு வாய்ப்பு.. எந்தெந்த மாவட்டங்களில்? இன்றைய வானிலை நிலவரம்..
மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்றும் நாளையும் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 06.07.2023: தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழையும், திருப்பூர், தேனி, திண்டுக்கல் மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யவாய்ப்புள்ளது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/tamil-nadu/tamil-nadu-is-likely-to-receive-heavy-rain-today-and-tomorrow-according-to-the-meteorological-department-127175/amp
CM Stalin Speech: வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறுகிறார் - ஆளுநரை சாடிய முதலமைச்சர்?
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அறிவாலையத்தில் நடைபெற்ற திருமண நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசுகையில், வள்ளலாரைப் பற்றி ஒருவர் உளறி வருகிறார் என கூறியுள்ளார்.கடந்த வாரத்தில் ஆளுநர் ரவி வள்ளலார் குறித்து கருத்து கூறியிருந்த நிலையில், ஆளுநரை சாடும் வகையில் முதலமைச்சர் பேசியுள்ளதாக திமுக வட்டாரத்தில் பேச்சுகள் அடிபடுகிறது. மேலும் படிக்க https://tamil.abplive.com/news/politics/cm-stalin-speech-someone-is-talking-about-vallalar-the-chief-minister-who-slapped-the-governor-127150/amp
Minister Ponmudi On Governor :“நிறை குறை இருக்கலாம்; எங்ககிட்ட சொல்லட்டும் ஆளுநர்; அறிக்கை விடுவதா?” - அமைச்சர் பொன்முடி சரமாரி தாக்கு!
Ravindhranath MP: தேனி தொகுதி எம்.பி., ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது - சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு