• Minister Ma Subramanian: திடீர் மயக்கம்...மருத்துவமனையில் அனுமதி...அமைச்சர் மா.சுப்பிரமணியனுக்கு ஆஞ்சியோ சிகிச்சை!


தமிழ்நாடு அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் உடல்நலனில் அதிக அக்கறை கொண்டவர். உடற்பயிற்சியில் அதிக ஆர்வம் கொண்ட இவர், அடிக்கடி அரசு சார்பில் நடைபெறும் மாரத்தான்களில் கூட பங்கேற்றுள்ளார்.  இந்நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் உள்ள தனது வீட்டில் இன்று பார்வையாளர்களை சந்தித்துக் கொண்டிருந்த போது, லேசான மயக்கம் ஏற்பட்டது. இதனால்,  கிண்டியில் உள்ள கலைஞர்  நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனைக்கு  அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். மேலும் படிக்க 



  • 7.5% Reservation: 7.5% ஒதுக்கீடு மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூல்; தனியார் கல்லூரிகளிடம் பேசித் தீர்வு காண்க- ராமதாஸ்


7.5% ஒதுக்கீடு பெற்று கல்லூரிகளில் சேர்ந்துள்ள மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கும் தனியார் கல்லூரிகளிடம் தமிழக அரசு பேசவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ’தமிழ்நாட்டில் 7.5% இட ஒதுக்கீட்டில் பொறியியல் படிப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுப் பள்ளி மாணவர்களிடம் கூடுதல் கட்டணம் கேட்டு தனியார் கல்லூரிகள் கட்டாயப்படுத்துவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் அதிர்ச்சியளிக்கின்றன. அரசுப் பள்ளிகளில் பயின்ற ஏழை மாணவர்கள் உயர்கல்வி கற்பதே கடினம் எனும் நிலையில், அந்த மாணவர்களிடம் கட்டணம் வசூலிப்பது கண்டிக்கத்தக்கது. மேலும் படிக்க 



  • Edappadi Palanisamy: தமிழகத்தை காப்பாற்ற முடியவில்லை, இந்தியாவை காப்பாற்றுகிறார் முதல்வர் - மதுரையில் இபிஎஸ் தாக்கு


சட்டமன்றத்தில் நான் கேள்வி எழுப்பினேன். அப்போது ஏன் முதல்வர் அமைதியாக இருந்தார். அ.தி.மு.க., ஆட்சியின் போது நடைபெற்றதை மட்டும் குறிப்பிட்டு பேசுகிறார்கள். வேண்டுமென்றே அவதூறு செய்தியை பரப்புகிறார்கள். வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இதை நான் சட்டமன்றத்திலும் பேசி உள்ளேன். குற்றவாளியை கைது செய்தது அ.தி.மு.க., தான், வழக்கு நடைபெற்றதும் எங்கள் ஆட்சியின் போது தான். குற்றவாளிகளுக்கு வாதாடுவதற்காக இருந்தது தி.மு.க., வழக்கறிஞர். மேலும் படிக்க 








உலகக் கோப்பஒ செஸ் தொடரொல் நார்வே வீரர் கார்ல்சனை எதிர்த்து போட்டியிட்ட பிரக்ஞாந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். முன்னணி வீரரான கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளியிட்டார். இறுதிப்போட்டி முதல் சுற்றுகளும் டிரா ஆன நிலையின்,. டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்றது. மேலும் படிக்க 

 



  • TN Rain Alert: இன்று 11 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை.. அடுத்த இரண்டு நாட்களுக்கு செம்ம மழை இருக்கு.. இன்றைய மழை நிலவரம்..