உலக செஸ் தொடரில் 2-வது இடம் பிடித்த பிரக்ஞானந்தாவுக்கு சென்னை விமான நிலையத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
அஜர்பைசானில் இருந்து சென்னை திரும்பிய பிரக்ஞ்சானந்தாவை தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் வீரர்கள் சார்பில் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். மேள தாளங்களுடன் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
உலகக் கோப்பஒ செஸ் தொடரொல் நார்வே வீரர் கார்ல்சனை எதிர்த்து போட்டியிட்ட பிரக்ஞாந்தா இரண்டாம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். முன்னணி வீரரான கார்ல்சனுடன் மோதிய பிரக்ஞானந்தா மிகச் சிறப்பான ஆட்டத்தினை வெளியிட்டார். இறுதிப்போட்டி முதல் சுற்றுகளும் டிரா ஆன நிலையின்,. டை பிரேக்கர் சுற்று நடத்தப்பட்டது. இந்தப் போட்டி விறுவிறுப்பாக சென்றது. முன்னணி வீரருக்கு கடும் சவால் அளித்தது பிரக்ஞ்னந்தாவின் நகர்வு. ஆனால், இந்த 2.5,- 1.5 என்ற புள்ளிக்கணிக்கில் கார்ல்சன் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
பிரக்ஞானந்தா அரசு சார்பில் பரிசு
சென்னை வந்த பிரக்ஞானந்தா தனது கும்பத்துடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அவர் வென்ற வெள்ளிப்பதக்கத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலினிடம் காண்பித்தார். இந்தச் சந்திப்பில் இளைஞர்நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் இருந்தார். 21 ஆண்டுகளுக்குப் பிறகு உலக செஸ் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்று இந்தியாவிற்கு பெருமை சேர்ந்த பிரக்ஞானந்தாவிற்கு அரசு சார்பில் ரூ.30 லட்சம் ஊக்கத்தொகையாக வழங்கினார். முதலமைச்சர் இல்லத்தில் பிரக்ஞானந்தாவிற்கு தேநீர் விருந்து அளிக்கப்பட்டது.