• இமாச்சல பிரதேசத்திற்கு அளிக்கப்பட்ட நிவாரணம்.. முதலமைச்சரின் ஸ்டாலினுக்கு சுக்விந்தர் சிங் சுகு நன்றி..!


இமாச்சல பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர் சிங் சுகு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலிக்கு நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ வெள்ள பாதிப்புகளுக்கு ரூ. 10 கோடி நிவாரணத் தொகை வழங்கியதற்கு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி. இடரின்போது செய்யும் உதவியானது உங்களது ஒற்றுமை உணர்வை காட்டுகிறது.” என தெரிவித்தார். இமாச்சல பிரதேசத்தில் நிவாரண பணிகளுக்காக தமிழ்நாடு அரசு சார்ப்பில் நிதியுதவி வழங்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். மேலும் படிக்க 



  • CM Stalin Condolences: தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல்.. ரூ.5 லட்சம் நிதியுதவி


தனியார் தொலைக்காட்சி ஒளிப்பதிவாளர் சங்கரின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.5 லட்சம் நிதியுதவியும் அறிவித்துள்ளார். சந்திரயான் விண்கலம் தொடர்பான செய்திக்காக திருவனந்தபுரம் சென்று திருநெல்வேலி திரும்பும் வழியில் உயிரிழந்தார் என்ற துயரமான செய்தியினைக் கேட்டு மிகுந்த வேதனையடைந்தேன்.  மேலும் இவ்விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் மூன்று நபர்களுக்கு சிறப்பு சிகிச்சை அளிக்க அறிவுறுத்தியுள்ளேன். மேலும் படிக்க 



  • ஆளுநர் , முதலமைச்சர் விமானங்கள் தாமதம்..! பரபரத்த சென்னை விமான நிலையம்...! நடந்தது என்ன ?


சென்னை உள்நாட்டு விமான நிலையத்தில் இன்று தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், திருச்சிக்கு காலை 9:45 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில் திருச்சிக்கும், தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி காலை 8:25 மணிக்கு இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானத்தில், கோவைக்கும் செல்வதற்கு  பயண ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. முதலமைச்சர் ஆகிய இருவரும் ஒரே நேரத்தில், விஐபி கேட் ஆறாம் எண் வழியாக வந்து விமானத்தில் ஏற இருந்ததால், பாதுகாப்பு அதிகாரிகள் இடையே பரபரப்பு ஏற்பட்டது. மேலும் படிக்க 



  • 'ஆளுநரை திமுகவினர் சம்மந்தம் இல்லாமல் வம்புக்கு இழுக்கிறார்கள்’ - அண்ணாமலை குற்றச்சாட்டு


கோவை விமான நிலையத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், “நிலாவிற்கு செல்ல வேண்டுமென்ற பாரதியார் கனவு நேற்று நனவாகியுள்ளது. இதுவரை யாரும் செல்லாத தென்துருவத்திற்கு இந்தியா சென்று சாதனை படைத்துள்ளது. இது அனைவருக்கும் கிடைத்த பெருமை. கடந்த காலங்களில் உலக நாடுகள் இந்தியாவை கிண்டல் செய்த நிலை இருந்த நிலையில், தற்போது தனித்துவமான நாடாக இந்தியா உருவாகியுள்ளது. மேலும் படிக்க 



  • CM Stalin On NTA Exam: இந்தி தேர்வு இதுக்கெல்லாம் கட்டாயமா? மத்திய அரசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்


மத்திய அமைச்சகத்தின் கீழ் இயங்கும் கல்வி நிறுவனங்களில் ஆசிரியரல்லாத பணியிடங்களுக்கு,  இந்தி மொழித் தேர்வை கட்டாயமாக்கி இருப்பதற்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில் ”தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் (NIT) மற்றும் மத்திய கல்வி அமைச்சகத்தின்கீழ் இயங்கும் பிற நிறுவனங்களில் உள்ள ஆசிரியரல்லாத பணியிடங்களுக்குத் தேசிய தேர்வு முகமை (NTA) இந்தி மொழித் தேர்வைக் கட்டாயமாக்கி இருப்பது மொழிச் சமத்துவத்தைக் குலைக்கும் செயலாகும். பன்முகத்தன்மையை அப்பட்டமாக அவமதிப்பதாகும். மேலும் படிக்க